Tamannaah: பணமோசடி வழக்கு; 2 மணி நேரம் விசாரிக்கப்பட்ட நடிகை தமன்னா - என்ன நடந்தது?
HPZ டோக்கன் எனும் மொபைல் செயலி பிட்காயின், மற்றும் கிரிப்டோகரன்ஸி முதலீடுகள் என்ற போலி விளம்பரம் மூலம் பலரை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், HPZ டோக்கன் செயலி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை தமன்னா கலந்துகொண்டதாகத் தெரிகிறது. அதற்காக அவருக்கு ஒரு தொகையும் வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.
எனவே, HPZ டோக்கன் செயலி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், நேற்று அஸ்ஸாம் மாநிலம் கெளஹாத்தியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமன்னா தன் பெற்றொருடன் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தமன்னா மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் இதுவரை 76 சீன நிறுவனங்கள் உட்பட மொத்தம் 299 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்வதற்காகவே இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


