தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் பணிகள்... Degree முடித்தவர்கள் கவனத்திற்கு..!
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் Assistant Section Officer பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைச்சகத் துறை அல்லது தமிழ்நாடு நீதி அமைச்சகத் துறையில் ஜூனியர் அசிஸ்டண்ட் அல்லது அசிஸ்டண்ட் பணிக்கு தேர்வு செய்ய உள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
என்ன வேலை?
தலைமை செயலகத்தில் உள்ள நிதி மற்றும் நீதி துறையை தவிர்த்து பிற துறைகளில் உதவி பிரிவு அதிகாரி பணி.
மொத்த காலி பணியிடங்கள்: 35
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SC, ST பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
என்ன படித்திருக்க வேண்டும்?
இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டண்ட் அல்லது அசிஸ்டன்ட் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து குறைந்தது 5 ஆண்டுக்கால டிராப்டிங் அனுபவம் தேவை.
குறிப்பு: தமிழ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு சேரும்போது உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
எப்படி தேர்வு நடைபெறும்?
ஜனவரி 4, 2025-ல் பொது தமிழ், பொது ஆங்கிலம் தேர்வுகள் நடைபெறும்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: நவம்பர் 15, 2024.
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.tnpscexams.in
மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள Combined Civil Services Examination - Group VA Services இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


