Allu Arjun: 1600 கி.மீ சைக்கிள் பயணம்; அல்லு அர்ஜுனைக் காண வந்த உ.பி ரசிகர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.

இவரது நடிப்பில் வெளியான புஷ்பா’ படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. புஷ்பா படத்துக்காகவே அவருக்கு இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த நிலையில் அல்லு அர்ஜூனைப் பார்க்க 1600 கி.மீ. பயணம் செய்திருக்கிறார் ரசிகர் ஒருவர். உத்தரப் பிரதேசம் அலிகார் பகுதியில் இருந்து ஹைதராபாத் வரை சைக்கிளில் அர்ஜூனை சந்திக்க 1600 கி.மீ. பயணம் செய்திருக்கிறார். இறுதியாக ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை நேரில் சந்தித்த அவர், நெகிழ்ச்சியுடன் தனது பயணம் குறித்துக் கூறியிருக்கிறார்.

Allu Arjun

அவருக்கு பூச்செடியை பரிசாக வழங்கி இருக்கிறார் அல்லு அர்ஜூன். அதுமட்டுமின்றி அந்த ரசிகர் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு குறித்து இன்ஸ்டா பக்கத்தில் அந்த ரசிகர் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “இறுதியாக என் ஹீரோவை நேரில் சந்தித்துவிட்டேன். அவர் உண்மையில் மிகவும் இனிமையானவர். என்னுடைய உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவரை நேரில் சந்தித்தது மிகவும் எமோஷனலான அனுபவமாக இருந்தது.

View this post on Instagram

A post shared by (@macho_man_1998)

என்னுடைய பெற்றோர்களின் ஆசிர்வாதம் மற்றும் ஃபாலோயர்ஸ்களால் எனது கனவு நனவானது” எனப் பதிவிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு சல்மான் கானை பார்க்க அவரது ரசிகர் ஒருவர் மத்தியப் பிரதேசத்திலிருந்து சைக்கிளில் 1000 கி.மீ. பயணம் செய்து மும்பைக்கு சென்று அங்கு சல்மான் கானைப் பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.