Baba Siddique: ``யூடியூப்பில் துப்பாக்கி பயிற்சி; 11-வது முயற்சியில் படுகொலை - கொலையாளிகள் பகீர்!
10 முறை கொலை முயற்சியில் தோல்வி..
Baba Siddique murder: மும்பையில் கடந்த 12ம் தேதி தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மூன்று பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குர்னைல் சிங் மற்றும் தர்மராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பாபா சித்திக்கை கொலை செய்ய 10 முறை முயற்சி செய்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு காரணத்தால் பாபா சித்திக்கை கொலை செய்ய முடியாமல் போனதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சில நேரம் அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் பாபா சித்திக் வரமாட்டார். அல்லது சில நேரம் பாபா சித்திக்குடன் வேறு சிலர் இருப்பார்கள். இது போன்ற காரணங்களால் 10 முறை தப்பித்ததாக கொலையாளிகள் தெரிவித்துள்ளனர்.
யூடியூப் வீடியோ பார்த்து துப்பாக்கி சுட பயிற்சி..!
இது தவிர புனேயில் பால்பண்ணை நடத்தி வந்த பிரவீன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரவீன் சகோதரர் சுபம் தான் பேஸ்புக்கில் பாபா சித்திக்கை கொலை செய்தது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டம் என்று அறிவித்தார்.
தற்போது சுபம் தலைமறைவாக இருக்கிறார். புனேயில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்த ஹரிஷ்குமார் என்பவரும் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஷ்குமார் கொலையாளிகளுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் பணம் கொடுத்துள்ளார். ஹரிஷ்குமார் உத்தரப்பிரதேசத்தில் இருந்து அழைத்து வந்த தர்மராஜ், கெளதம் ஆகியோர் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் ஆவர். ஹரிஷ்குமார் கொடுத்த இரு சக்கர வாகனத்தில் வந்துதான் கொலையாளிகள் தினமும் பாபா சித்திக்கை கண்காணித்து வந்தனர். பிரவீன் தான் ஹரிஷ்குமாரிடம் ரூ.60 ஆயிரம் கொடுத்து பழைய இருசக்கர வாகனம் வாங்கி கொலையாளிகளிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
ஹரிஷ்குமார் புனேயில் இரு சக்கர வாகனம் வாங்கி அதனை மும்பைக்கு கொண்டு வந்து கொடுத்துள்ளார். அதோடு தலைமறைவாக இருக்கும் சுபம் ரூ.4 லட்சத்தை தனது சகோதரர் பிரவீனிடம் கொடுத்துள்ளார். பிரவீன் அப்பணத்தை கொலையாளிகள் மூன்று பேருக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார் என்று போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலையாளிகள் எப்படி துப்பாக்கியால் சுடவேண்டும் என்பது குறித்து யூடியூப் வீடியோவில் பார்த்து கற்றுக்கொண்டுள்ளதும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


