Financial freedom: சென்னை, புதுச்சேரியில்... முதலீடுகளை கற்றுத் தரும் நிகழ்ச்சி.. அனுமதி இலவசம்!

நிதி சூப்பர் மார்கெட்

ஒருவரை வாழ்வின் அடுத்தக் கட்டம் மற்றும் உச்சத்துக்கு கொண்டு செல்வது முதலீடுகள் ஆகும். இந்த முதலீடுகள் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கொடுப்பவையாக இருக்க வேண்டும்.

மேலும் குறைவான வருமான வரிக் கட்டுவதாக இருக்க வேண்டும். அது போன்ற ஒரு முதலீட்டு வகைதான் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இதனை ஒரு நிதி சூப்பர் மார்கெட் என சொல்லாம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறுகிய காலம், நடுத்தரக் காலம் மற்றும் நீண்ட காலம் என அனைத்து காலக் கட்டத்துக்கும் திட்டங்கள் உள்ளன.

மேலும், அதிக ரிஸ்க் எடுக்க கூடியவர்கள், நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்க கூடியவர்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் என அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற திட்டங்கள் உள்ளன.

முதலீடுகளும் நீங்களும்

சென்னை, புதுச்சேரியில்... ‘முதலீடுகளும் நீங்களும்..!’

நாணயம் விகடன் மற்றும் AMFI இணைந்து நடத்தும் ‘முதலீடுகளும் நீங்களும்..!’ என்ற நிகழ்ச்சி சென்னையில் அக்டோபர் 19-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6.30 pm – 8.30 pm) நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சென்னை ரீடெய்ல் சேல்ஸ் சேனல் ஹெட் கே.செந்தில் மற்றும் நிதி நிபுணர் ஏ.கே.நாராயண் பேசுகிறார்கள்.

இதே நிகழ்ச்சி புதுச்சேரியில் அக்டோபர் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30 am – 12.30 pm) நடைபெறுகிறது. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனத்தின் புராடக்ட் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.ஜித்தேந்தர் மற்றும் நிதி நிபுணர் சுந்தரி ஜகதீசன் பேசுகிறார்கள்.

அனைவருக்கும் அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/AMFIIAP

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.