Udhayanidhi: “தண்ணீர் நிக்காம இருக்கே, அதான் வெள்ளை அறிக்கை”- எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்
எடப்பாடியின் விமர்சனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.
தமிழகத்தில் நேற்று தொடங்கி வரும் அக்டோபர் 17ஆம் தேதி வரை கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்தது. இதனையொட்டி தமிழ்நாடு அரசும் அதற்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தது. உதயநிதி ஸ்டாலின் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை செய்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
அப்போது அவரிடம் மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், “ கனமழையில் கூட ‘தண்ணீர் நிக்காம இருக்கே, அதான் வெள்ளை அறிக்கை’ என்று பதிலளித்திருக்கிறார். "மீண்டும் கனமழை பெய்தால், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்கிறது. மழையின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மெட்ரோ பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


