Job Fair: தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம்; 20,000 காலி பணியிடங்கள்; யார், யார் பங்கேற்கலாம்?

வரும் சனிக்கிழமை (அக்டோபர் 19) பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

என்ன...எங்கே?

பெரம்பலூர் துறையூர் ரோட்டில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

எப்போது?

வரும் சனிக்கிழமை (அக்டோபர் 19, 2024) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை.

எத்தனை நிறுவனங்கள்...காலி பணியிடங்கள்?

120-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இது.

என்ன படித்திருக்க வேண்டும்?

10, +12, எந்த துறையில் வேண்டுமானாலும் டிப்ளமோ டிகிரி, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு, நர்சிங், டிரைவர், டெக்னிசியன் துறைகளிலும் வேலை உண்டு.

வயது வரம்பு: 18 - 35

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

பயோ டேட்டா, கல்வி சான்றிதழ்களின் நகல்கள்.

குறிப்பு: பணி முன் அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். ஆண், பெண் என இரு பாலினரும் கலந்துகொள்ளலாம்.

முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.