Rain Alert : `அடுத்த 2 நாள்களுக்கு மழை எப்படி இருக்கும்? - வானிலை ஆய்வு மையம் தகவல்!

கனமழை, அதி கனமழை, எந்ததெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும் என்பவைதான் இன்றைய முக்கியச் செய்திகள்.

வட கிழக்குப் பருவமழைத் தொடங்கிவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை வெள்ளத்தைப் பார்த்திடாத மாவட்டங்களான மதுரை, கோயம்புத்தூர் பகுதிகளில்கூட கனமழை பெய்து முக்கியச் சாலைகள் வெள்ளக் காடாக மாறியிருக்கின்றன. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களின் வானிலை நிலவரம் இப்படி இருக்க, தலைநகர் சென்னை என்றால் சொல்லவே தேவையில்லை. சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்த 2 நாள்களுக்கு மழை எப்படி இருக்கும் எனபது குறித்துப் பேசியிருக்கிறார், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.

இது குறித்துப் பேசியிருக்கும் அவர், "தென் மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று உள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும். மழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு தொடரும்

கடந்த 24 மணிநேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்திருக்கிறது" என்றார்.

மேலும், எந்ததெந்த மாவட்டங்களில், எப்படியிருக்கும் மழை என்பது குறித்து பாலச்சந்திரன் பேசியவை இவை:

ரெட் அலர்ட் / அதி கனமழை

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (அக்டோபர் 16, 17) அதி கனமழை பெய்யும்.

Withdrawal of southwest Monsoon from entire country and simultaneous Commencement of Northeast Monsoon rainfall over southeast peninsular India, today, the 15th October, 2024 #withdrawalmonsoon #southwestmonsoon #imd #IMDWeatherUpdate #NorthEastMonsoon @moesgoi @ndmaindia… pic.twitter.com/IVS2dLHuIi

— India Meteorological Department (@Indiametdept) October 15, 2024

கனமழை

விழுப்புரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்னாமலை, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால், திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.