இறையருள் செல்வர்கள் 15: ஈசனுக்கு சொற்களால் கோயில் கட்டும் சிவனடியார்!

இறையருள் செல்வர்கள்: மாதம் தோறும் அபூர்வமான சைவ சமயத் தகவல் களை, தம்முடைய `சிவசுந்தரி என்ற மாத இதழில் எழுதி வருகிறார். பூசை அருணவசந்தன் எனும் புனைப்பெயர் கொண்ட பூசை ச.ஆட்சி லிங்கம் ஐயா

இறையருள் செல்வர்கள்

சுந்தரமூர்த்தி பெருமான் 60 நாயன்மார் களை அடையாளம் காட்ட வென்றே பூமியில் அவதரித்தவர். அவரது பாடலே விரிந்து பெரியபுராணம் ஆனது. அதுவே சைவத்துக்கும் சிறப்பானது.

அவர் மட்டும் பாடியதோடு முடித்துக் கொண்டு, எழுதிவைக்காமல் இருந்திருந்தால் நாயன்மார்களை நாம் அறியமுடியாமல் போயிருக்கும். அரிய தகவல்களை, வரலாறுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குச் சேர்க்கும் சிறப்பு எழுத்துக்கு உண்டு.

அவ்வகையில், ‘சைவ சமயக் களஞ்சியம்’ எனும் பல தொகுதிகள் கொண்ட புத்தகங்கள் நம்மிடம் உள்ளன. சைவம் குறித்த முழுமை யான தகவல்களைக் கொண்ட அருள் பொக்கிஷம் அது.

அன்பர் ஒருவர் உண்டு. நடமாடும் சைவக் களஞ்சியமாகவே திகழ்கிறார் அவர். மாதம் தோறும் அபூர்வமான சைவ சமயத் தகவல் களை, தம்முடைய `சிவசுந்தரி என்ற மாத இதழில் எழுதி வருகிறார். சிவனடியார்கள் பலருக்கும் அவரைத் தெரிந்திருக்கும். அவர்தான் `பூசை அருணவசந்தன் எனும் புனைப்பெயர் கொண்ட பூசை ச.ஆட்சி லிங்கம் ஐயா. பின்னாளில் சைவத்துக்கு இவர் ஆற்றவிருக்கும் திருப்பணிகள் தெரிந்தோ என்னமோ இவருக்கு ஆட்சிலிங்கம் என்று அருமையாக இவரின் தாய்-தந்தை திருநாமம் சூட்டினார்கள் போலும்!

இறையருள் செல்வர்கள்

எந்தக் கோயிலில் என்னென்ன சிவ மூர்த்தங்கள் உள்ளன. கோயில் அமைப்பு, வழிபடும் முறை, அங்குள்ள சிற்பங்கள், கல் வெட்டுகள், வரலாறு, புராணம், குறிப்பிட்ட கோயிலில் மட்டுமே இருக்கும் சிறப்பம்சங்கள், வித்தியாசமான வழிபாடுகள், பலன் தரும் பரிகாரங்கள் என சைவ சமயத்தின் அத்தனை தகவல்களையும் அறிந்திருக்கும் அபூர்வ அடியார் இவர். தமிழகத்தில் இவர் அறியாத கோயில்களே இல்லை எனலாம். ஆலயங்கள் பற்றி எந்த சந்தேகம் என்றாலும் இவரைக் கேட்டால் போதும். மிகத் தெளிவாக விளக்கி விடுவார்.

பெரும்பாலும் யாருமே அறிந்திராத அபூர்வ தகவல்களை விளக்குவதே இவரின் தனித்த அடையாளம். சகலரிடமும் அன்போடு பழகும் எளிய மனிதர். பல்வேறு இதழ்களில் ஆலயங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். நம் தர்மமும் கோயில்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி யாக இருப்பவர். நலிந்துபோன... கவனிக்கப் படாமல் இருக்கும் பல ஆலயங்களைப் பற்றி எழுதியும், பலரின் துணை கொண்டு திருப் பணிகள் செய்தும் தொண்டாற்றி வருபவர். திருவாவடுதுறை ஆதின குருமகா சந்நிதானங்களை தமது வழிகாட்டிகளாகக் கொண்டு இயங்கி வருபவர்.

எத்தனையோ சிக்கல்கள், பண நெருக்கடி கள் இருந்தபோதிலும் 1993-ம் ஆண்டு முதல் சுமார் 31 ஆண்டுகளாக சிவமஞ்சரி எனும் தலைப்பில் 180 சைவ சமய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 2008 முதல் சிவசுந்தரி என்ற பெயரில் சைவ சமய மாத இதழைநடத்தி வருகிறார். இதழ்களில், `சிவ பெருமானுக்குச் சொல்லால் கட்டப்பட்டத் திருக்கோயில்! என்று குறிப்பிடப்பட்டிருக்கும். `உண்மைதான் இதழ் ஒவ்வொன்றும் அந்த ஈசனுக்கு சொல் லால் அமைந்த கோயில் என்றே அடியார் களும் சிலாகிக்கிறார்கள். பல்வேறு முயற்சி களுக்குப் பிறகு இவரைச் சந்தித்து உரையாடினோம்; வியந்தோம்! `சைவ சமயத் துக்கு ஒரு கூகுள் என்றே ஆட்சிலிங்கம் ஐயாவைச் சொல்ல லாம். எத்தனை எத்தனை இன்பமானது நம் சைவ சமயம் என்பதை இவரின் பேச்சும் எழுத்தும் மெய்ப்பிக்கும்.

இறையருள் செல்வர்கள்

``உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றதும், ‘`என்னைப் பற்றி என்ன இருக்கிறது. பேச வேண்டிய பெரியவர்கள் எவ்வளவோ இருக்கிறார்கள் என்று பணிவோடு சொல்லிச் சிரிக்கிறார்.

`‘அச்சிறுப்பாக்கத்தில் பூசை.வீ.சரவண பெருமாள்-ஜெயலட்சுமி தம்பதிக்கு மகனா கப் பிறந்தார். ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கே இணைந்து வர... இவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கோயில் களஞ்சியப் பிரிவின் தலைவராக இருந்த கோ.மு.முத்துசாமிப் பிள்ளையின் உதவியாள ராக இருந்து, தமிழகத்தின் பல்வேறு கோயில் கள் குறித்த விவரங்களைத் திரட்டினார். அப்போதிருந்தே, ஆலயங்களைத் தேடும் இவரின் ஆர்வம் தொடங்கியது எனலாம். அது இப்போதும் தொடர்வது ஆச்சர்யம்’ என்கிறார்கள் இவரின் நண்பர்கள்.

சென்னையில் வசித்து நூல்களையும் மாத இதழையும் வெளியிட்டு வந்த இவர், இறை ஆணைப்படி தற்போது சொந்த ஊரான அச்சிறுப்பாக்கத்தில் வசிக்கிறார். அங்கே பைரவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி அங்கேயே பல தொண்டுகள் செய்து வருகிறார்.

அஷ்டமி, கிருத்திகை வழிபாடுகள், லட்சார்ச்சனை, அன்னதானம், எழுத்துப் பணிகள், வெளியீட்டுப் பணிகள் என எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறார். 64 பைரவர்கள், 64 யோகினிகள் கொண்ட பிரமாண்ட பைரவர் ஆலயம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

சைவம் மட்டுமன்றி அம்பிகை, முருகப் பெருமான், திருமால் போன்ற கடவுளர்களின் அருளைப் பற்றியும் நூலாக எழுதியுள்ளார். ஜைன சமயம் பற்றியும் ஜைன ஆலயத் திருமேனிகள் என்ற நூல் எழுதியுள்ளார்.

`‘எதையும் ஆவணப்படுத்தி வைக்க வேண் டும். நம் கலாச்சாரத்தின் பெருமைகள் பலவும் தெரியாமல் போனதுக்குக் காரணமே அதை எழுதி வைக்காமல் போனதே. மேலை நாட்டு வரலாறுகள் முழுமையாகத் தெரிவ தற்கும், நம் வரலாறு சரிவரத் தெரியாமல் போனதற்கும் காரணம் நம் வரலாறுகளை முறையாக முழுமையாக எழுதி வைக்காததே.

புலவர்களின் பாடல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் போன்றவை சில விஷயங்களை நமக்கு அளிக்கின்றன. ஆனாலும் நாம் அறியாமல் போனவை ஏராளம் என்பேன்.

அதனால், என்னால் இயன்றவரை நம் ஆலயங்கள், அவற்றின் புராண - வரலாறு களை எழுதி ஆவணப்படுத்தியுள்ளேன். இதற்காகக் கடும் உழைப்பு தேவைப்பட்டது. ஆனாலும், அவை இன்றைய இளைஞர்களுக் குச் சேரும்போது, என் உழைப்பின் பெருமையை உணர்கிறேன்.

நம் ஆலயங்கள் வெறும் வழிபாட்டு இடங்கள் மட்டுமல்ல, அங்கு எத்தனையோ பயன்பாட்டுச் சிறப்பு கள் உள்ளன. அந்த ஊருக்கே கோயில்தான் பாதுகாப்பு அரணாக இருந்து வந்துள்ளது. இன்னும் நாம் அறிய வேண்டிய அதிசயங்கள் நம் தமிழக ஆலயங்களில் உண்டு. அவற்றை, வரும் தலை முறையினர் விருப்பு-வெறுப்பின்றி உண்மை யாக ஆவணப்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை; கனவு.

தாராசுரம், பெரியகோயில் போன்ற ஆலயங்களை இனி நம்மால் உருவாக்க முடியுமா? ஆனால் அவற்றின் பெருமைகளை உணர்ந்து காக்க முடியும். எனவே தயைகூர்ந்து இளைஞர்கள் எல்லோரும் தங்கள் பகுதியில் உள்ள பழைமையான ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டும்.

இயன்றால் தமிழகமெங்கும் உள்ள ஆலயங் களைப் பார்த்து வர வேண்டும். இது, வெறும் ஆன்மிகத்துக்காக மட்டுமல்ல; நம் கலை, கலாசாரம், பண்பாடுகளைத் தெரிந்துகொள்ள நிச்சயம் உதவும். நாம் எவ்வளவு பெரிய, சிறப்பான கூட்டத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை நிச்சயம் ஆலயங்கள் உணர்த்தும்.

என்னுடைய இத்தனை ஆண்டு கால எழுத்தும், உழைப்பும் நம் ஆலயங்களின் சிறப்பை உணர்த்தவே. கடினச் சூழலிலும் அடியேன், பத்திரிகையை நடத்துவது, நமது சைவத்தின் சிறப்பை உணர்த்தவே. மற்றபடி இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. குருமார்களும் ஆன்மிக அன்பர்களும் என் பணிக்கு எத்தனையோ விதங்களில் உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றியோடு வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி வரும் தலைமுறையினர் நமது தர்மங் களையும் கோயில்களையும் பாதுகாப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால், இந்த எளியேனின் எழுத்தும் வாழ்வும் அர்த்தம் பெற்றுவிட்டதாய் நம்புவேன். சிவாய நம’ என்று கண்கள் பணிக்க முடித்துக் கொண் டார் பூசை ஆட்சிலிங்கம் ஐயா.

இவர் போன்ற புண்ணிய புருஷர்களே நம் தர்மத்தின் வேராக இருந்து வருகிறார்கள். இவரது வாழ்வும் தொண்டும் இன்னும் சிறக்க வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டி வணங்கி விடைபெற்றோம்.

-அடியார்கள் வருவார்கள்...

`இசையில் இனிமை எப்படி?’

மாமன்னர் அக்பரின் அவையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் தான்சேன். இவர்மீது அதீத அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் அக்பர். ஒருமுறை தான்சேனிடம் ``உங்கள் குருவை அரசவைக்கு வந்து பாடச் சொல்லுங்களேன்’’ எனக் கேட்டார் அக்பர்.

``என் குரு பாவா ஹரிதாஸ் இங்கே வரமாட்டார். நாம்தான் அவரிடம் போகவேண்டும்’’ என்றார் தான்சேன்.

அதன்படி அக்பரும் தான்சேனும் ஒருநாள் பாவா ஹரிதாஸின் குடிலுக்குச் சென்றனர். அங்கே அவரின் இசையைக் கேட்டு மெய்ம்மறந்தார் அக்பர். சில நாள்களுக்குப் பிறகு அவையில் தான்சேன் பாடியபோது ``தான்சேன்! உன் குரு எவ்வளவு நன்றாகப் பாடுகிறார்! அவர் பாடலைக் கேட்டபிறகு... அவருடன் ஒப்பிட்டால் நீங்கள் பாடுவது சப்பென்று இருக்கிறதே?’’ என்று கேட்டார்.

அதற்கு தான்சேன் ``அரசே! நான் உங்களுக்காகப் பாடுகிறேன். அவர் இறைவனுக்காகப் பாடுகிறார். வேறுபாட்டுக்கு இதுதான் காரணம்!’’ என்றார்.

-அருள்மொழி, சென்னை-44

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.