Bala: நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி புகார்; கைது செய்த கேரள காவல்துறை; அடுத்து என்ன?
நடிகர் பாலாவை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
தமிழில் அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, காதல் கிசு கிசு, கலிங்கா, வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இயக்குநர் சிறுத்தை சிவாவின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு அம்ருதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா, கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரைப் பாலா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் முதல் மனைவி அம்ருதாவிற்கும், அவருக்கும் இடையே பிரச்னைகள் இருந்துகொண்டேதான் இருந்தது.
இந்நிலையில் முன்னாள் மனைவி அம்ருதாவையும் அவரது மகளையும் பின்தொடர்ந்து பாலா துன்புறுத்தியதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்டோபர் 14) அதிகாலை எர்ணாகுளத்திலுள்ள எடப்பள்ளி பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கேரள காவல்துறை அவரைக் கைது செய்திருக்கின்றனர்.
கடவந்தரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாலாவை, இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த உள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


