Vettaiyan: எல்லாரும் தலைவர் ஃபேன்ஸ் தானே! - விஜய்யின் ரெஸ்பான்ஸ் குறித்து வெங்கட் பிரபு பதில்
நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கி உள்ளார். இதன் கதை போலி என்கவுன்ட்டர் பற்றியது ஆகும்.
இன்று (அக்டோபர் 12) பிரஸ்மீட் ஒன்றில் தி கோட் திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டார். அதில், தி கோட் திரைப்படம் வெளியீட்டுக்குப் பிறகு நடிகர் விஜய், அப்படம் குறித்து எதுவும் கருத்துச் சொன்னாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, வெங்கட் பிரபு, "அவரு (விஜய்) ஆரம்பத்தில் இருந்தே படம் பத்தி சந்தோஷமாவேதான் இருக்காரு" என்று பதில் கூறினார்.
முதல் நாளே வேட்டையன் படத்தை நடிகர் விஜய் பார்த்திருந்தார். அது குறித்தும், அப்படம் பற்றி விஜய்யின் கருத்து குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு, "பார்த்தோம்...சூப்பராக என்ஜாய் பண்ணோம். எல்லாருமே தலைவர் ஃபேன்ஸ் தானே" என்று பதிலளித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


