Vettaiyan: ``அவருக்காக வாங்கின புது சட்டை - ரஜினி குறித்து நெகிழ்ந்த த.செ.ஞானவேல்

ஜெய் பீம் படத்தின் மூலம் இந்திய சினிமா முழுக்க கவனம் பெற்றவர் இயக்குநர் த.செ.ஞானவேல். அவரின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டின்போது ரஜினி குறித்து ஞானவேல் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேட்டையன் படத்தில்... ரஜினி

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஞானவேல், " தமிழ் சினிமாவுல எந்த நல்ல படம் வந்தாலும் ரஜினி சார் அழைச்சுப் பாராட்டுவார். அதே மாதிரி ஜெய் பீம் படத்துக்கு ரஜினி சார் பாராட்டுவாருன்னு நினைச்சேன். ஆனால் அவர் கூப்பிடவே இல்ல. நான் அவர் கூப்பிடுவார்னு புது சட்டை எல்லாம் வாங்கி வச்சு இருந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு செளந்தர்யா மெசேஜ் பண்ணாங்க. அதுக்குப் பிறகு அப்பாவுக்கு ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கன்னு சொன்னாங்க. அப்போ நான் சும்மா இல்லாம இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு செளந்தர்யா மேம், அப்பாவும் உங்க ஜெய்பீம் படம் பார்த்துட்டாங்க ரொம்பப் பிடிச்சுருக்குனு சொன்னாங்க,னு சொன்னார். ஒரு நாள் ரெண்டு கதை எடுத்துட்டுப் போனேன்.

ஒன்னு வேட்டையன் படத்தோட கதை. இன்னொரு ஜாலியான கதையை எடுத்திட்டு போனேன். அப்போ செளந்தர்யா மேம் வேட்டையன் கதை கேட்டு நல்லா இருக்கு. அப்பா பண்ணினா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. இன்னொரு கதை இருக்குனு சொன்னேன். அப்போ இதுவே இருக்கட்டும்னு சொன்னாங்க. அப்புறம் ஒரு நாள் அவங்க கால் பண்ணினாங்க. அப்போ அந்த மந்திர குரல் கேட்டுச்சு... இந்தக் கதையை டெவலப் பண்ண சொன்னாரு ரஜினி சார். அப்போ எனக்கு நிறைய கமிட்மென்ட் இருந்தாலும் இந்தக் கதைல வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

ரஜினி, ஞானவேல்

ஒருநாள் பேட்டியில வேட்டையன் படத்தைப் பத்தி ரஜினி சார்கிட்ட கேட்டாங்க. அதுக்கு அவர் கருத்துள்ள, பிரமாண்டாமான பொழுதுபோக்குத் திரைப்படம்னு சொன்னாரு. இதை நமக்குத்தான் சொல்றாங்கன்னு எடுத்துக்கிட்டு நான் வேலை பார்த்தேன். எப்போதும் என்கிட்ட தயாரிப்பாளர் காசு போடுறாரு அவங்க பணம் எடுக்கணும். மக்கள் நம்பி வர்றாங்க அவங்களை ஏமாத்திடக் கூடாதுனு சொல்லிட்டே இருப்பார் ரஜினி சார். நான் ஒரு பத்திரிகையாளர்.. இன்னும் எனக்குள்ள ஒரு பத்திரிகையாளர் இருக்கார். அதனால, நான் ரஜினி சார் கிட்ட கேள்வி கேட்டுட்டே இருப்பேன். ஒருதடவ, நீங்க சினிமாவுக்கு வந்து 50 வருஷமாச்சு.. எப்படி எல்லாத்தையும் தக்க வைக்கிறீங்கனு கேட்டேன். அதுக்கு அவர் Adjust, Accomodate, Adopt னு சொன்னாரு. அதுல இருந்து நானும் அவர் சொன்னதை பின்பற்றத் தொடங்கிட்டேன்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.