Ratan TATA: ``இந்த இழப்பை... ரத்தன் டாடாவின் உதவியாளர் முதல் பிரபலங்கள் வரை இரங்கல் பதிவு!

இந்தியாவின் மிக முக்கியப் பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த சில வாரங்களாக உடல்நலமில்லாமல் இருந்தார். அதனால், மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு வயதுமூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Shri Ratan Tata Ji was a visionary business leader, a compassionate soul and an extraordinary human being. He provided stable leadership to one of India’s oldest and most prestigious business houses. At the same time, his contribution went far beyond the boardroom. He endeared… pic.twitter.com/p5NPcpBbBD

— Narendra Modi (@narendramodi) October 9, 2024

ரத்தன் டாடா மறைவு குறித்து பிரதமர் மோடி, `` ரத்தன் டாடா தொலைநோக்கு சிந்தனைக் கொண்ட வணிகத் தலைவர். இரக்கமுள்ள ஆன்மா கொண்ட அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு நிலையான தலைமையேற்றவர். அதே நேரத்தில், அவர் தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பலரில் தன்னையே நேசித்தார்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ``இந்திய தொழில்துறையின் தலைவரும், இந்தியாவின் பெருநிறுவன நிலப்பரப்பை வடிவமைத்த பத்ம விபூஷன் ரத்தன் டாடாவின் மறைவால், காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளது. அவரது நேர்மையும், கருணையும் வருங்கால சந்ததியினர், தொழில்முனைவோர் மற்றும் இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

The Congress party is deeply saddened by the passing of Padma Vibhushan Shri Ratan Tata, a titan of Indian industry and a philanthropist who shaped Indias corporate landscape.

His integrity and compassion will continue to inspire future generations of corporates, entrepreneurs… pic.twitter.com/H9jgRiyHHf

— Congress (@INCIndia) October 9, 2024

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது. நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட இந்திய தொழில்துறையின் முன்னோடி அவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ``ரத்தன் டாடாவின் மறைவால், தேசத்தைக் கட்டியெழுப்பும் கார்ப்பரேட் வளர்ச்சியை, நேர்மையுடன் சிறந்து விளங்கும் ஒரு சின்னத்தை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷண் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், சிறந்த டாடா-வின் மரபை முன்னெடுத்துச் சென்று, உலக அரங்கில் பிரம்மிக்க வைத்திருக்கிறார். அனுபவமிக்க தொழில் வல்லுநர்களையும், இளம் மாணவர்களையும் ஒரே மாதிரியாக ஊக்கப்படுத்தினார். அவரின் மக்கள் தொண்டு சேவை விலைமதிப்பற்றது" எனக் குறிப்பிட்டார்.

In the sad demise of Shri Ratan Tata, India has lost an icon who blended corporate growth with nation building, and excellence with ethics. A recipient of Padma Vibhushan and Padma Bhushan, he took forward the great Tata legacy and gave it a more impressive global presence. He…

— President of India (@rashtrapatibhvn) October 9, 2024

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ``நாடு ஒரு சிறந்த, திறமையான மகனை இழந்துவிட்டது. முப்பது ஆண்டுகளாக அவரைத் தெரியும். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். தற்போது இந்தியாவின் சிறந்த மகனின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கூகுல் சிஇஒ சுந்தர் பிச்சை தன் எக்ஸ் பக்கத்தில், ``ரத்தன் டாடாவுடனான எனது கடைசிச் சந்திப்பில், வேமோவின் முன்னேற்றம் குறித்துப் பேசினோம், அவருடைய திட்டம் ஆர்வத்தை தூண்டியது. அவர் ஒரு அசாதாரண வணிகத்தையும், ஆழமான சேவையையும் விட்டுச் செல்கிறார். இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழிநடத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தவர். இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Deeply saddened by the demise of legendary industrialist and true nationalist, Shri Ratan Tata Ji.
He selflessly dedicated his life to the development of our nation. Every time I met him, his zeal and commitment to the betterment of Bharat and its people amazed me. His commitment… pic.twitter.com/TJOp8skXCo

— Amit Shah (@AmitShah) October 9, 2024

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``பழம்பெரும் தொழிலதிபரும் உண்மையான தேசியவாதியுமான ரத்தன் டாடா மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். நம் நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். நான் அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், பாரதத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கான அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நமது நாடு மற்றும் அதன் மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு லட்சக்கணக்கான கனவுகளை மலர வழிவகுத்தது. ரத்தன் டாடாவை அவரது நேசத்துக்குரிய தேசத்திலிருந்து காலத்தால் பறிக்க முடியாது. அவர் நம் இதயங்களில் என்றும் வாழ்வார். டாடா குழுமத்திற்கும் அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் - மக்கள் சேவை ஆகிய இரண்டிலும் அழுத்தமான முத்திரை பதித்துள்ளார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், ``ரத்தன் டாடா என்னுடைய தனிப்பட்ட ஹீரோ. என் வாழ்நாள் முழுவதும் அவரை பின்பற்ற முயற்சித்தேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரின் பங்களிப்பு நவீன இந்தியாவின் வரலாற்றில் பொறிக்கப்படும் ஒரு பொக்கிஷம். அவரது உண்மையான செல்வம் பொருள் செல்வத்தில் இல்லை. மாறாக அவரது நெறிமுறைகள், நேர்மை, பணிவு மற்றும் தேசபக்தி ஆகியவற்றில் உள்ளது.

Ratan Tata Ji was a personal hero of mine, someone I’ve tried to emulate throughout my life. A national treasure whose contributions in nation-building shall forever be etched in the story of modern India.

His true richness lay not in material wealth but in his ethics,… pic.twitter.com/wv4rbkH2i1

— Kamal Haasan (@ikamalhaasan) October 9, 2024

2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, நான் அவரை தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தபோது சந்தித்தேன். தேசிய நெருக்கடியின் அந்த தருணத்தில், டைட்டன் நிமிர்ந்து நின்று, ஒரு தேசமாக இந்தியாவை மீண்டும் கட்டமைக்கும் ஆக்கமாக மாறியது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், டாடா குழுமம் மற்றும் எனது சக இந்தியர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்பஜன் சிங், `` நவீன இந்தியாவைக் கட்டமைத்தவர்களில் ஒருவராக ரத்தன் டாடா எப்போதும் நம் இதயத்தில் இருப்பார். அவரது தலைமைத்துவம், பணிவு, ஒழுக்கம், அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவர் உருவாக்கிய நிறுவனங்களுக்காக மட்டுமல்ல, எண்ணற்ற உயிர்களுக்கான அவரது கருணைக்காகவும் அவரது மரபு என்றென்றும் நினைவுகூரப்படும்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

RIP Sir Satnam Waheguru Ratan Tata ji will always be in our hearts as one of the builders of modern India.

His leadership, humility, and unwavering commitment to ethics and values set a benchmark that will continue to inspire generations. His legacy will forever be… pic.twitter.com/wVeyGXQ9Ct

— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 9, 2024

துணை சபாநாயகர் ஜக்தீப் தன்கர், ``இந்திய தொழில்துறையின் தலைசிறந்த நபரான ஸ்ரீ ரத்தன் டாடா மறைவால் ஆழ்ந்த வேதனையடைகிறேன், அவரின் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பங்களிப்புகள் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள தொழில்முனைவோருக்கு என்றென்றும் உத்வேகமாக இருக்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகை பிரியாங்கா சோப்ரா, ``உங்கள் கருணையால், நீங்கள் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை மாற்றினீர்கள். உங்களின் தலைமைத்துவம், உதவும் மனப்பான்மை தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். நாட்டிற்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் உங்கள் ஈடு இணையற்ற அர்ப்பணிப்புக்கும் நன்றி. நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருந்தீர்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சாந்தனு நாயுடு - ரத்தன் டாடா

ரத்தன் டாடாவின் இளம் உதவியாளர் சாந்தனு நாயுடு, ``இந்த நட்பு இப்போது எனக்கு விட்டுச்சென்ற என் இழப்பை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சிப்பேன். துக்கம் என்பது அன்புக்கு கொடுக்க வேண்டிய விலை. குட்பை, என் அன்பான கலங்கரை விளக்கமே..." எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.