``ஒரு தலைவருக்கும் மேலாக இருந்தார் ரத்தன் டாடா குறித்து டாடா தலைவர் சந்திரசேகரன் உருக்கம்..!
இந்தியாவின் மிக முக்கியப் பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த சில வாரங்களாக உடல்நலமில்லாமல் இருந்தார். அதனால், மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலமில்லாத நிலையில் நேற்று இரவு வயதுமூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாடாவின் மறைவு குறித்து டாடா நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள பதிவில், ரத்தன் நேவல் டாடா உண்மையிலேயே ஒரு அபூர்வத் தலைவர். அவரின் அளவிட முடியாத பங்களிப்புகள் டாடா குழுமத்தை மட்டுமல்ல, நமது தேசத்தின் கட்டமைப்பையும் வடிவமைத்துள்ளது. டாடா குழுமத்திற்கு, டாடா ஒரு தலைவருக்கும் மேலாக இருந்தார். எனக்கு, அவர் ஒரு வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்தார். அவர் உதாரணத்தால் ஈர்க்கப்பட்டார். சிறந்த ஒருமைப்பாடு மற்றும் புதுமை ஆகியவற்றில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், டாடா குழுமம் அவரது தலைமையின் கீழ் உலகம் முழுவதும் விரிவடைந்தது. ரத்தன் டாடாதான் டாடா குழுமம் மீண்டும் விமான சேவையில் நுழைய முக்கிய காரணமாகும்.
1937ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நேவல் டாடா, சூனி டாடா தம்பதியின் மகனாக பிறந்த ரத்தன் டாடா தனது பெற்றோர் பிரிந்த பிறந்த பிறகு தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். நான்கு முறை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்தும் அதனை ரத்தன் டாடா பயன்படுத்திக்கொள்ள மறுத்துவிட்டார். 1961ம் ஆண்டு டாடா குழுமத்தில் ரத்தன் டாடா டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்தார். 1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா பதவி ஏற்றார். 2012ம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்து பல கம்பெனிகளை உருவாக்கியதோடு, பல நிறுவனங்களை வாங்கவும் செய்தார்.
2009ம் ஆண்டு உலகின் மிகவும் மலிவான காரை ஒரு லட்சத்திற்கு அறிமுகம் செய்தார். கல்வி முதல் சுகாதாரம் வரை, டாடாவின் முன்முயற்சிகள், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலரின் வாழ்க்கையை மாற்றி உள்ளது." என்று குறிபிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


