சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது… அதுக்கு கால்களாவது சுத்தமாகட்டும்… உதயநிதி…!
சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது, அதுக்கு அவங்களின் கால்களாவது சுத்தமாகட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கின்றார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: ” என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவுதான் என்பதை அம்பலப்படுத்தி நிற்கும் சங்கிகளை பார்த்து எனக்கு பரிதாபம் மட்டும் தான் வருகின்றது. கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால் திராவிட கொள்கையை நாம் எந்த அளவுக்கு சரியாக பின்பற்றுகின்றோம் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைப்பாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களும், பேச்சுக்களும் இருந்தது. நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடும் சொற்கள் என்று எதுவும் இல்லை. அனைவரும் சமம் என்கின்ற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலை தருகின்றது.
மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் இது என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். கழக உடன்பிறப்புகளுக்கு இதை கண்டு கோபம் வர வேண்டாம். இதற்கு எதிர்வினை ஆற்றுவதை உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் நாம் நடை போடுவோம்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.
The post சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது… அதுக்கு கால்களாவது சுத்தமாகட்டும்… உதயநிதி…! first appeared on Tamilnadu Flash News.மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


