``ஒரு அண்ணனாக விஜய்க்கு நான் சொல்லும் அட்வைஸ் இதுதான்! - மாநாடு குறித்த கேள்விக்கு சீமான் பதில்!
நடிகர் விமல் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் சார்.
இப்படத்தை போஸ் வெங்கட் இயக்க வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன், ராமா உள்ளிட்ட சிலர் நடித்திருக்கின்றனர். சாயா கண்ணன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்துவிட்டு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
சார் படக்குழுவினரைப் பாராட்டி பேசிய பிறகு சீமானிடம், விஜய்யின் தவெக மாநாட்டிற்கு உங்களுக்கு அழைப்பு வந்ததா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், "இந்த மாதிரி பேச்சுக்கள் எழுந்தப்போது ஒரு அண்ணனாக நான் அவருக்கு சொன்னது என்னவென்றால் யாரையும் அழைக்கக்கூடாது. அப்படி அழைத்தால் மாநாட்டில் தேவையில்லாத பிரச்னைகள் வரும்.
கட்சியைத் தொடங்கிய அவர் அந்த மாநாட்டில் கொள்கை, லட்சியம் என்ன என்பதை பேசிவிட்டு வந்திடவேண்டும். அக்கட்சி வளர்ந்த பிறகு மற்ற கட்சியினரை கூப்பிட்டு பேச வைக்கலாம். கட்சி முதல் மாநாடு தொடங்கும் போது விஜய் தான் பேச வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து பவன் கல்யாணின் சனாதனக் கருத்துகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "சனாதனம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினால், நாங்களும் மேடை போட்டு பேசுவோம். லட்டு உருட்ட 5 நிமிடம், ஆனால் 50 நாள்களாக உருட்டுகிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


