Ajith - Shalini : `ரேஸராக மீண்டும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி - `ரேஸர் அஜித்தை வாழ்த்திய ஷாலினி!

அஜித் தற்போது `குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஐரோப்பியன் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதுமட்டுமல்லமல், `அஜித் குமார் ரேஸிங் என்ற ரேஸிங் குழு ஒன்றையும் தொடங்கியிருக்கிறார் அஜித். ரேஸிங் களம் அஜித்துக்கு புதிதல்ல. ஏற்கெனவே `ஃபார்முலா பி.எம்.டபுள்யூ ஆசியா, `பிரிட்டீஷ் ஃபார்முலா 3 போன்ற கார் பந்தயங்களில் அஜித் பங்கேற்றிருக்கிறார்.

Ajith Kumar - அஜித் குமார்

இப்படி ரேஸிங் மீது அளப்பரிய ஆர்வம் கொண்டிருக்கும் அஜித் `வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் அந்தாமனில் ஒரு உலக சாதனை சமீபத்தில் படைத்திருக்கிறது. பொது தளத்தில் அஜித் பேசும் காணொளி போன்றவற்றை வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்பு மேற்கொண்ட ஒரு ரைட்டில் அஜித் பேசிய காணொளி ஒன்றை அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா கடந்த வாரம் வெளியிட்டார். அதில், "பயணம்தான் சிறந்த கல்வி என நான் சொல்வேன். சாதியும் மதமும் நாம் சந்திக்காத மனிதனையும் வெறுக்க வைக்கும். என அழகாக பேசியிருந்தார் அஜித்.

அடுத்தாண்டு ரேஸிங் பக்கம் களமிறங்கும் அஜித்துக்கு அவரின் மனைவி ஷாலினி ஒரு வாழ்த்துப் பதிவை போட்டிருக்கிறார். அவர், " ரேஸிங் டிரைவராக உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு பிடித்ததை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான ரேஸிங் பயணத்துக்கு உங்களுக்கும் உங்கள் அணிக்கும் வாழ்த்துகள்." என பதிவிட்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.