ரயில்வேயில் 14,298 பணியிடங்கள்; ITI, Diploma, Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்!
இந்திய ரயில்வேயில், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினிரியங் படித்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில், டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14928 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
முன்னதாக 9144 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக 5154 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பம் செய்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம்.
விண்ணபிக்க கடைசி தேதி: 16.10.2024
பணி விவரங்கள்:
1. பணியின் பெயர்: Technician Grade – 1 (Signal)
காலியிடங்கள்: 1092
சம்பளம்: ரூ.29,200
வயது வரம்பு: 18 வயது முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Technician Grade – 1 (Signal) எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரங்கள்

கல்வித்தகுதி:
Electronics / Computer Science / Information Technology / Instru- mentation போன்ற பொறியியல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ என்ஜினியரிங் அல்லது B.E. / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Physics / Electronics / Computer Science / Information Technology / Instrumentation போன்ற பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றில் B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Technician Grade - III
காலியிடங்கள்: 13,206
சம்பளம்: ரூ.19,900
வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், Fitter / Welder / Plumber / Painter / Wireman / Electronics Mechanic / Crane Operator / Pattern Maker / Moulder / Foundryman / Forger and Heat Treater / Power Electronics / Machinist / Carpenter/Turner/Machine Tool Operator / Gas Cutter போன்ற ஏதேனும் ஒரு டிரேடில் ITI படித்திருக்க வேண்டும். அத்துடன், NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விதிமுறைகள்:
விண்ணப்பம் செய்பவர்களின் வயது 1.7.2024 தேதியின்படி கணக்கிடப்படும். SC / ST / OBC விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் மத்திய அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
Technician Grade - III எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரங்கள்

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், தேர்வு நடைபெறும் இடத்தின் விபரங்கள் மின் அஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
எழுத்துத்தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். பின்னர், சான்றிதழ் சரி பார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.indianrailways.gov.in
www.rrbchennai.gov.in
என்ற இணையதளம் வழியாக விண்ணபிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்:
General / OBC பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500.
EWS/SC/ST/ பெண்கள், முன்னாள் ராணுவத்தினர்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250.
கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணபிக்க கடைசிநாள் 16.10.2024 .
முழுமையான விவரங்களை படித்து விண்ணப்பம் செய்ய Employment Notice No: (CEN) 02/2024 இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


