காதலுக்குத் தடை: சப்பாத்தியில் விஷம் கலந்து குடும்பத்தில் 13 பேரை கொன்ற பெண்... விசாரணையில் பகீர்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், கைர்பூருக்கு அருகில் உள்ள ஹைபத் கான் ப்ரோஹி கிராமத்தில், சப்பாத்தி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், ஒருவர் பின் ஒருவராக 13 பேரும் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர்கள் அனைவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால்தான் உயிரிழந்திருக்கின்றனர் எனத் தெரியவந்தது.

ரொட்டி

அது தொடர்பாக திவீர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண், ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இது தொடர்பாக அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் இந்தக் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அந்தப் பெண் தனது காதலனுடன் சேர்ந்து அவர்களை கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

வீட்டில் ரொட்டி செய்ய பயன்படுத்திய கோதுமையில் காதலருடன் சேர்ந்து விஷம் கலந்திருக்கின்றனர். விசாரணையில் ரொட்டி மாவில் விஷம் கலந்ததை அந்தப் பெண் ஒப்புக்கொண்டதால், காவல்துறை அவரை கைது செய்து விசாரித்து வருகிறது. தலைமறைவாக இருக்கும் அந்தப் பெண்ணின் காதலனையும் தேடி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.