திருக்குறள்: ’இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்’- சென்னையில் நடைபெற்ற தேசியப் பயிலரங்கம்
சென்னையில் ’இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்’ என்ற தலைப்பில் தேசியப் பயிலரங்கம் அக்டோபர் 2-ம் தேதி நடைபெற்றது.
ஏழு நாள்களாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சென்னையின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்(சிஐசிடி) நடத்தியது. மத்திய அரசு கடந்த அக்டோபர் 12, 2004-இல் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்ததை அடுத்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தன்னாட்சி தகுதிகொண்ட நிறுவனமாக உருவாக்கப்பட்டு செயல்படுகிறது.
சிஐசிடி-யின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் தலைமை ஏற்று இந்த ’இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேசத்தில் முதன்மைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான முனைவர் பி.வி.ஜெகன்மோகன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். சிஐசிடி-யின் துணைத் தலைவரும் பேராசிரியருமான மருத்துவர் சுதா சேஷய்யன், வாழ்த்துரை வழங்கியிருந்தார். திருக்குறளில் ஆர்வமிக்க பிறமொழியாளர்களை அழைத்து அவர்களின் பார்வையில் திருக்குறள் தாக்கத்தை அறிவது என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். இப்பயிலரங்கிற்காக வரவழைக்கப்பட்ட கட்டுரைகள் நிறைவு விழாவில் நூலாகவும் வெளியிடடப்பட்டது. அவை, இந்தியிலும், ஆங்கிலத்திலும் என இரு மொழிகளில் இடம் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


