Jani Master: கிடைத்த ஜாமீன்.. வலுத்த எதிர்ப்பு - ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

இன்று ஜாமீனில் வரவிருந்த நிலையில், ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெயிலர், திருச்சிற்றம்பலம், டாக்டர் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிப்புரிந்துள்ளார் ஜானி மாஸ்டர். இவர் தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

ஜானி மாஸ்டர் தனது 16 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், பின்னர், அது பலமுறை தொடர்ந்தது என்றும் இவரது முன்னாள் உதவி நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது கடந்த மாதம் புகாரளித்தார். இதனையடுத்து ஜானி மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ரத்து செய்யப்பட்ட விருது!

இந்த புகார் மற்றும் கைது சம்பவத்திற்கு முன்பே, வரும் 8-ம் தேதி நடக்க உள்ள திரைப்பட விருது விழாவில் ஜானி மாஸ்டருக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காதா பாடலின் நடனத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதை சக நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணனுடன் இணைந்து வாங்கவிருந்தார்.

இந்த தேசிய விருதை பெற ஜானி மாஸ்டருக்கு ரங்காரெட்டி நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து இவருக்கு தேசிய விருது வழங்குவது குறித்தும், ஜாமீன் வழங்கியது குறித்தும் சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனை தொடர்ந்து தற்போது, இவருக்கு வழங்கவிருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.