``இதைத் திருடியதிலிருந்து கெட்ட கனவுகளால் அவதிப்பட்டேன்... - மன்னிப்பு கடிதம் கொடுத்த திருடன்!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் நவாப்கஞ்ச் பகுதியில், கௌ காட் ஆசிரமம் இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் இருக்கும் கோயிலில் 8 பொன்களால் செய்யப்பட்ட ராதா கிருஷ்ணர் சிலைகள் திருடப்பட்டது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று, திருடப்பட்ட சிலையும், அதனுடன் ஒரு கடிதமும் கிடைத்தது.

காவல்துறை விசாரணை

அதில், ``நான் ஒரு பெரிய தவறு செய்து, தெரியாமல் ராதா கிருஷ்ணரின் சிலைகளைத் திருடிவிட்டேன். நான் திருடியதிலிருந்து கெட்ட, பயங்கரமான கனவுகளால் அவதிப்பட்டு வருகிறேன். தூங்கவும், சாப்பிடவும், நிம்மதியாக வாழவும் முடியவில்லை. சிலையை விற்கும் நோக்கத்தில் திருடினேன். ஆனால் இப்போது எனது மகனும், மனைவியும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளனர். அதனால், அந்த சிலையை மீண்டும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என எழுதியிருந்தது. அதைத் தொடர்ந்து ஆசிரம பூசாரி பூஜைகள் செய்து பிறகு அந்த சிலையை கோயிலில் சேர்த்தார்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, ``கௌ காட் ஆசிரம கோவிலின் பூசாரியான மஹந்த் சுவாமி ஜெய்ராம் தாஸ், செப்டம்பர் 23 அன்று இரவு கோவிலிலிருந்து ராதா கிருஷ்ணரின் விலைமதிப்பற்ற அஷ்டதாது சிலை திருடப்பட்டிருக்கிறது என புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத திருடர்களுக்கு எதிராக பாரதிய நீதி சன்ஹிதா என்ற பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தோம்.

திருடப்பட்ட சிலைக்கு பூஜை

இந்த நிலையில்தான் கோயிலுக்கு வெளியே ஒரு சாக்குப் பை இருந்தது. மக்கள் எல்லோரும் அதைப் பார்த்து பயந்து ஓடினர். அதை காவல்துறை அதிகாரி திறந்து பார்த்தபோதுதான் திருடப்பட்ட சிலையும், அதில் இந்த கடிதமும் கிடைத்தது. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.