நவராத்திரி திருவிழா: சோட்டானிக்கரைக்கு 1 டன் மலர்களால் மாலை அனுப்பும் நிலக்கோட்டை பக்தர்..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவிற்கு பக்தர் ஒருவர், டன் கணக்கில் மலர் மாலைகளை காணிக்கையாக அனுப்பி வருகிறார்.

பூக்கட்டும் பெண்கள்

நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கரிகாலபாண்டியன். இவர், சோட்டானிக் கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நடக்கும் நவராத்திரி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் பூக்களை காணிக்கையாக வழங்கி வருகிறார்.

நவராத்திரி திருவிழா நடக்கும் 9 நாள்களுக்கும் ஒரு டன் அளவிலான பூக்கள் நிலக்கோட்டை மலர் சந்தையில் வாங்கப்பட்டு பின்னர் அந்த பூக்களை பூக்கட்டும் தொழிலாளர்கள் மாலையாக, தோரணங்களாக கட்டுகின்றனர். நேர்த்தியாக கட்டப்படும் பூக்கள் பார்வைக்கு அழகாக காட்சி தருகின்றன. இவை அனைத்தும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தை அலங்கரிப்பதற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பூக்கள்

இதுகுறித்து கரிகால பாண்டியனிடம் பேசினோம். ``கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பூ வியாபாரத்திற்காக கேரளா சோட்டானிக் கரை பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது அந்த அம்மன் எனக்கு தாயாக தோன்றினாள். அதைத் தொடர்ந்து என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் அலங்கார மலர் பூக்கள், எளிதில் வாடாத பூக்களை தேர்வு செய்து நவராத்திரி விழாவுக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் பூ மாலைகளை அம்மனுக்கும், ஆலயத்தை அலங்கரிக்கவும் அனுப்பி வைக்கிறோம்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.