Thalapathy69: மீண்டும் விஜய்யுடன்... Love U Chellams - பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சிப் பதிவு
சினிமா பயணத்தின் கடைசி படமாக தளபதி 69 திரைப்படத்தை அறிவித்தார் நடிகர் விஜய். கன்னட திரையுலகின் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இந்த திரைப்படத்தை இயக்குகிறார் அ.வினோத்.
இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர் விஜய்க்கு அனிருத் இசை அமைக்கும் ஐந்தாவது படம் இது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வருகிறது.
அதன்படி, பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, பிரேமலு படம் மூலம் பிரபலமான மலையாள நடிகை மமிதா பைஜு, இயக்குநர் கௌதம் மேனன், நடிகை பிரியாமணி, நடிகர் நரேன் உள்ளிட்டோரை அறிவித்திருந்தது. இந்தப் பட்டியலில் நடிகர் பிரகாஷ் ராஜும் இணைந்திருக்கிறார்.
கில்லி, சிவகாசி, ஆதி, போக்கிரி, வில்லு, வாரிசு என விஜய் - பிரகாஷ்ராஜ் காம்போ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இந்தப் படத்திலும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், ``மாற்றுமொருமுறை தளபதி 69-ல்... விஜய் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. அரவணைத்து வரும் அனைத்து அருமை மக்களுக்கும்... Love U Chellams" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


