Sk Productions: ``பெயரை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக... - எஸ்கே புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை!
தமிழ் திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் எஸ்கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். கனா, வாழ், டாக்டர், டான், கொட்டுக்காளி உள்ளிட்ட பல படங்களை எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதற்கிடையில், எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெயரில் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்தது. இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.
இதற்கு மாறாக தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள், அல்லது சமூகவலைதளப் பதிவுகளையும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


