Lubber Pandhu: `என்னுடைய படங்களில் விஜயகாந்த் சாரைக் கொண்டாடுவேன்! - நெகிழும் தமிழரசன் பச்சமுத்து

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் லப்பர் பந்து.

ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் விஜயகாந்த்தின் தீவிர ரசிகராக வரும் கெத்து தினேஷ் என்ட்ரிக்கு ஒலிக்கும் விஜயகாந்தின் நீ பொட்டு வச்ச தங்கக் குடம் பாடல் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

லப்பர் பந்து! - சினிமா விமர்சனம்

இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசியிருக்கிறார். "யாரை எல்லாம் பார்த்து இந்த திரைப்பயணத்தில் கற்றுக்கொண்டு வந்தேனோ? அவர்கள் எல்லோரும் என்னை பாராட்டும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. சில நேரங்களில் என்னைத்தான் எல்லோரும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. அந்த அளவிற்கு ஒரு நல்ல வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

லப்பர் பந்து படம் ரிலீஸ் ஆகும் வரைதான் என்னுடைய படமாக இருந்தது. தற்போது எல்லோருக்குமான படமாக மாறியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஊடகங்களின் ஆதரவிற்கு நன்றி. விஜயகாந்த் சாரைக் கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன். இருந்தாலும் கதைக்கு ஏற்ற இடத்தில்தான் வைத்திருக்கிறேன். அடுத்த படத்தை பொறுத்தவரை எந்த இடத்தில் விஜயகாந்த் சாரை வைக்க வேண்டும்? வேண்டாம் என்பது கதையைப் பொறுத்துதான் இருக்கும்.

தமிழரசன் பச்சமுத்து

ஆனால் விஜயகாந்த் சாரை முடிந்தளவிற்கு என்னுடைய படங்களில் கொண்டாடுவேன். இந்தப் படம் வெற்றி அடையும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்தளவிற்கான மரியாதை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த மரியாதைக்கு அடுத்த என்ன படம் பண்ணப்போகிறோம் என்பது மட்டும்தான் என் மனதில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.