Sivaji Ganesan: `இந்த உத்தமபுத்திரனை சமூகம் கிடைக்கப் பெற்றமைக்கு... - வைரலாகும் நாசரின் மடல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாள் இன்று.
அவருக்கு திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் மரியாதை செலுத்தியும், அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தும் வருகின்றனர். சென்னை, அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் கமல்ஹாசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்தநாளில் வணங்குகிறேன்." எனப் பதிவிட்டிருந்தார்.

நடிகர் நாசர், தன் கைப்பட,
``நடையழகு நினைவில் வைத்தாய்
கண்ணழகு கனவில் வைத்தாய்
உன் நாவண்மை நாண்புடைக்க கேட்கச் செய்தாய்
இந்த உத்தமபுத்திரனை என் சமூகம் கிடைக்கப் பெற்றமைக்கு
கலைவாணியே
தமிழ் கொற்றவையே
உன் தாள்களில் ஒரு கோடி தங்கப் பூக்கள்" என எழுதியிருக்கிறார்.
அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


