`தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்... - குவைத்திலிருந்து கதறும் ஆந்திரப் பெண்!

குடும்பச் சூழ்நிலை காரணமாக குவைத் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற ஆந்திரப் பிரதேச பெண், தனது முதலாளியால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக உதவி கேட்டு கதறி அழும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோ குறித்த தகவலின்படி, அந்தப் பெண் ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா என்று தெரியவந்திருக்கிறது.

பெண் - சித்தரிப்பு படம்

கவிதா அந்த வீடியோவில், ``தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். இங்கு கடும் சித்ரவதைக்குள்ளாகிறேன். எனக்கு மாற்றுத்திறனாளி கணவரும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்களுக்காகவே நான் குவைத் வந்தேன். ஆனால், நான் இங்கு அநீதிக்குள்ளாகிறேன்" என்று வீடியோ வாயிலாக ஆந்திர அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டியிடம் உதவி கேட்டிருக்கிறார்.

அதோடு, தனக்கு நேர்ந்துகொண்டிருக்கும் கொடுமையை விவரித்த கவிதா, தன்னுடைய முதலாளி தன்னை அறையில் பூட்டிவைத்து பட்டினி போட்டுத் துன்புறுத்துவதாகவும், குவைத் வர உதவிய முகவர் தன்னை அச்சுறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியறிந்த மாநில அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி, கவிதா பாதுகாப்பாக இந்திய திரும்புவதை உறுதி செய்ய மத்திய அரசு இதில் தலையிட வேண்டி மத்திய அமைச்சர் கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆந்திரா அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி

மேலும், கவிதாவின் நிலைமை வளைகுடா நாடுகளில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துன்பத்தைப் பிரதிபலிப்பதாகவும், கஃபாலா முறையின் கீழ் உள்ளூர் முதலாளிகள் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுப்பதாகவும் கடிதத்தில் ராம் பிரசாத் ரெட்டி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.