மதுபோதையில் அத்துமீறல்: மருத்துவரின் அந்தரங்க உறுப்பை வெட்டிவிட்டு தப்பி ஓடிய செவிலியர்..!
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கொந்தளிப்பு இன்னும் அடங்காமல் இருக்கிறது. அதற்குள் பீகாரில் மருத்துவமனைக்குள் செவிலியர் ஒருவரை மருத்துவரே மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள கங்காபூர் என்ற இடத்தில் ஆர்.பி.எஸ் ஹெல்த் சென்டர் என்ற ஒரு மருத்துவமனை இருக்கிறது. இம்மருத்துவமனையை டாக்டர் சஞ்சய் குமார் நிர்வகித்து வருகிறார்.
மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தில் இரவு நேரத்தில் டாக்டர் சஞ்சய் வெளியில் இருந்து மதுவிற்கு ஆர்டர் செய்திருந்தார். டாக்டரும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து மருத்துவமனைக்குள் மது அருந்தினர். இரவு பணியில் செவிலியர் ஒருவர் இருந்தார்.
போதை தலைக்கு ஏறியதும் மருத்துவமனையை உள்பக்கமாக கதவை பூட்டினர். பின்னர் பணியில் இருந்த பெண் செவிலியரை மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க செவிலியர் போராடினர். அனைவரும் குடிபோதையில் இருந்ததால் செவிலியரை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரு கட்டத்தில் டாக்டரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டி விட்டு மருத்துவமனை கதவை திறந்து கொண்டு செவிலியர் மருத்துவமனையில் இருந்து வெளியில் தப்பி ஓடி வந்தார். மருத்துவமனைக்கு வெளியில் ஒரு இடத்தில் மறைந்து கொண்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் புகார் கொடுத்த பெண் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்தி கொண்ட பிறகு மருத்துவமனைக்குள் சென்று பார்த்த போது டாக்டரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்ட நிலையில் இருந்தார். அவரையும் அவருடன் பாலியல் முயற்சியில் ஈடுபட்ட சுனில் குமார் மற்றும் அவதேஷ் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து துணை போலீஸ் கண்காணிப்பாளர் சஞ்சய் பாண்டே கூறுகையில், ``டாக்டரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மது போதையில் மருத்துவமனையை உள்பக்கமாக பூட்டிவிட்டு கண்காணிப்பு கேமராவை ஆப் செய்துவிட்டு செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். செவிலியர் அவர்களிடமிருந்து புத்திசாலித்தனமாக தப்பித்து வந்துவிட்டார். பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மது பாட்டில்கள், பிளேட், ரத்தக்கரை படிந்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


