சிக்கிய பட்டாம்பூச்சி திருடர்கள் - கைதும் 2,00,000 டாலர் அபராதமும் | நடந்தது என்ன?

இலங்கையின் தென்கிழக்கில் யாலா தேசிய பூங்கா அமைந்திருக்கிறது. திறந்தவெளிப் பூங்காவான இதில், காரில் சென்று வன விலங்குகளை காணமுடியும். இந்த நிலையில், கடந்த மே மாதம் 8-ம் தேதி, இந்தப் பூங்காவிலிருந்து இத்தாலியை சேர்ந்த இருவர், பூச்சிகளை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக பூங்காவில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ``சம்பவத்தன்று சந்தேகத்துக்கிடமான கார் ஒன்று பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்தது. அதைப் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

யாலா தேசிய பூங்கா இலங்கை

உடனே சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், காரை பரிசோதனை செய்தனர். காரின் பின் பகுதியில் பெரிய பெட்டி இருந்தது. அதில், சிறிதும் பெரிதுமான வன விலங்குகள் இருந்தன. நூற்றுக்கணக்கான ரசாயனம் பூசப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் வகை வகையான பூச்சிகள் பிடித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பாட்டில்களை மீட்டபோது, அதில் இருந்த பூச்சிகள் இறந்திருந்தன. அதைத் தொடர்ந்து வனத்துறையினர் காட்டில் சோதனையிட்டதில், சந்தேகத்துகிடமான வெளிநாட்டினர் இருவர் கைது செய்யப்பட்டனர்" எனக் குறிப்பிட்டார்.

பூச்சிகளை கடத்த முயற்சி

அதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பு, ``இத்தாலியைச் சேர்ந்த கால் மற்றும் கணுக்கால் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான லூய்கி ஃபெராரி (60) அவரின் மகன் மாட்டியா(28) ஆகியோர் விடுமுறையை கொண்டாடுவதற்காக இலங்கை வந்திருக்கின்றனர். அப்போதுதான் 92 வகை பட்டாம்பூச்சிகள் உட்பட நூற்றுக்கணக்கான உள்ளூர் பூச்சிகளை கடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள், பூச்சிகளையும், விலங்குகளையும் கவர்ந்து அவற்றை இரசாயன முறையில் பாதுகாக்க மெழுகுப் பைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

யாலா தேசிய பூங்கா இலங்கை

பூச்சிகளை சட்டவிரோதமாக சேகரித்தல், வைத்திருத்தல் மற்றும் கொண்டு சென்றதற்காக தற்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது ஆரம்பத்தில் 810 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவை 304 எனக் குறைக்கப்பட்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

`மன்னிப்புக் கோரும் உறவுகள்’

இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்தபோது, இத்தாலியில் இருக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்களும் நண்பர்களும், ``லூய்கி ஃபெராரி, பூச்சி ஆர்வலர். அவர் இத்தாலியின் வடக்கில் உள்ள மொடெனாவில் உள்ள பூச்சியியல் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். அவர் கடத்தியதாக கூறப்படும் அந்தப் வண்ணத்துப் பூச்சிகளுக்கு எந்த வணிக மதிப்பும் இல்லை என்பதிலிருந்து அவர் தவறான நோக்கத்தில் இதில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்பது விளங்கும். அவர் சார்பாக மன்னிப்புக் கோருகிறோம்." எனக் கேட்டுக்கொண்டனர்.

கைது

இந்த நிலையில், இந்த வழக்கு, விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதில், ``யாலா தேசிய சஃபாரி பூங்காவிலிருந்து நூற்றுக்கணக்கான பூச்சிகளை கடத்த முயன்றதற்காக இத்தாலிய தந்தை மற்றும் அவரது மகனும் 2,00,000 டாலர், அதாவது 60 மில்லியன் இலங்கை ரூபாய் (தற்போதைய இந்திய மதிப்பில் ரூ. 1,67,99,033) அபராதம், 24-ம் தேதிக்கும் செலுத்த வேண்டும். தவறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்" எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருகிறது.

இந்த தீர்ப்பை வரவேற்ற சுற்றுச்சூழல் சட்ட நிபுணர்கள், ``இந்த அதிக அபராத தொகை குற்றவாளிகளுக்கு எச்சரிக்க மட்டுமல்ல, இனி இதுபோல செயல்பட முயற்சிப்பவர்களுக்கும் எச்சரிக்கை" எனக் குறிப்பிட்டிருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.