Taylor Swift - Elon Musk: இது மிகவும் கீழ்தரமான கருத்து - எலான் மஸ்க்-ஐ கண்டித்த மகள்

இது மிகவும் கீழ்தரமான பேச்சு என டெய்லர் ஸ்விஃப்ட் குறித்த எலான் மஸ்க் பதிவுக்கு அவரின் மகள் வில்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் 12 மகள்களில் ஒருவராக அறியப்படுபவர் விவியன் வில்சன்(Vivian Wilson). இவர் கடந்த 2022-ம் ஆண்டு தன்னை திருநங்கை என்று அடையாளப்படுத்திக்கொண்டு, தனது பெயரை மாற்றிக்கொண்டார். அப்போதிருந்தே இவருக்கும், இவரது தந்தை எலான் மஸ்கிற்கு இடையே சுமூகமான உறவு கிடையாது. எலான் மஸ்க் மாற்று பாலின கருத்திற்கு எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெய்லர் ஸ்விஃப்ட் - எலான் மஸ்க் (Taylor Swift - Elon Musk)

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து டெய்லர் ஸ்விஃப்ட் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தன்னை டெய்லர் ஸ்விஃப்ட் - குழந்தை இல்லாத பூனைப்பெண் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "நல்லது டெய்லர்... நீ வெற்றி பெறு... நான் உனக்கு ஒரு குழந்தையைத் தருகிறேன். மேலும், உன் பூனைகளை என் வாழ்நாள்முழுவதும் பாதுகாக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எலான் மஸ்கின் மகள் வில்சனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ் குறித்த டெய்லர் ஸ்விஃப்ட் பதிவுக்கு, "கமலா ஹாரிஸை டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரிப்பதற்கு இதை விட சிறந்த சமயம் எதுவும் இல்லை. தேர்தலில் ஸ்விஃப்டீஸ் வாக்களிப்பதை காண காத்திருக்கிறேன். நீலத்திற்கு ஓட்டுப்போடுங்கள்" என்று ஆதரவு தெரிவித்து வில்சன் பதிவிட்டுள்ளார். டெய்லர் ஸ்விஃப்டின் ரசிகர்கள் ஸ்விஃப்டீஸ் என்றே அழைக்கப்படுவார்கள்.

டெய்லர் ஸ்விஃப்ட் குறித்த தனது தந்தை பதிவிற்கு, "இது மிகவும் கீழ்தரமானது" என்று பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.