பாலியல் வன்முறை புகாரில் சிக்கிய `ப்ரோ டாடி உதவி இயக்குனர் நீதிமன்றத்தில் சரண்டர்..!

கேரள சினிமா உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை புயலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதான புகார்களும் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன... கைதும் நடந்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒரு உதவி இயக்குனர் தானாக நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ஹிட் படமான ப்ரோ டாடி படத்தின் உதவி இயக்குனர் மன்சூர் ரஷித். இவர் எல் 2: எம்புரான் படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "ராஷீத் போதை மருந்து கலந்த பானத்தை கொடுத்து பாலியல் வன்முறை செய்ததாகவும், இதுக்குறித்து படப்பிடிப்பினர் சிலருக்கு தெரிந்திருந்தும் அவருக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. தொடர்ந்து எல் 2: எம்புரான் படத்தில் பணியாற்றிக்கொண்டு தான் இருந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Bro Daddy

இந்த புகாருக்கு பின்னர் இவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரஷீத் ஐதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தற்போது இவர் நீதிமன்ற காவலில் தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி ஜெயிலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ப்ரோ டாடி மற்றும் எல் 2: எம்புரான் படங்களின் இயக்குனரான பிருத்விராஜ் கூறும்போது, "2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தப் புகார் காவல் நிலையத்தில் பதியப்பட்ட பின்னர் தான், எனக்கு இந்த சம்பவம் குறித்து தெரிய வந்தது. தெரிந்ததுமே ரஷிதை படப்பிடிப்பில் இருந்து நீக்கிவிட்டேன். மேலும் சட்டத்திற்கு இணங்கி நடக்குமாறும் அறிவுறுத்தினேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.