Serial Today: முத்துவை ஏற்றிவிடும் நண்பர்கள்; காதலை வெளிப்படுத்திய விஜய்; கீதாவின் அதிர்ச்சி பின்னணி

சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் கலகலப்பாக நகர்ந்து. இந்த வாரம் கொஞ்சம் சீரியஸ் ஆக்கி முத்து மீனா இடையே மிகப்பெரிய விரிசல் ஏற்படும் அளவுக்கு கதையில் ட்விஸ்ட் வைத்துவிட்டனர். 

முத்துவின் நண்பர் செல்வம் பகலில் குடித்து விட்டு புலம்புகிறார். முத்து என்ன ஏது என்று விசாரிக்க, தன் பெரியப்பாவுக்கு மிகவும் பிரமாண்டமாக 60 ஆம் கல்யாணம் நடத்தி முடித்தனர், என் அப்பாவுக்கும் 60 ஆம் கல்யாணம் நடத்த வேண்டும், ஆனால் எனக்கு அந்த வசதி இல்லையே என செல்வம் புலம்புகிறார்.

செல்வம் கதாபாத்திரத்தின் புலம்பல், இன்றைய ஏழை இளம் தலைமுறையின் புலம்பலை பிரதிபலிக்கிறது. விலைவாசி வானளவு உயர்ந்துவிட்டது, ஒரு பிறந்தநாள் விழா நடத்தக் கூட லட்சங்களில் செலவாகிறது. இன்றைய காலகட்டத்தில் பிரமாண்டமான விழாக்கள் வீண் செலவு என்பது தான் பெரும்பாலான பொருளாதார வல்லுனர்களின் கருத்து.  `ஊர் மெச்ச இதை செய்யணும் அதை செய்யணும்’ என்று ஆசைப்படுவது தேவையா என ஸ்மார்டாக யோசிக்க வேண்டும்.

இனி சீரியல் கதைக்கு வருவோம். ஏற்கனவே  அப்பா - அம்மாவுக்கு விழா எடுக்க முடியவில்லை என எமோஷ்னலாக செல்வம் பேச, முத்து அதை கேட்டு மேலும் எமோஷனல் ஆகி `நான் தர்றேன் உனக்கு பணம், நாம அம்மா அப்பாவுக்கு சிறப்பா 60 ஆம் கல்யாணம் பண்ணலாம் ‘ என்று வாக்கு கொடுக்கிறார்.

இதனை மீனாவிடம் சொல்லி, சேமித்து வைத்த பணத்தை கொடுக்குமாறு முத்து கேட்கிறார். ஆனால் மீனா திட்டவட்டமாக மறுக்கிறார். நாம ரூம் கட்ட சேர்த்து வைக்கும் பணத்தை, ஆடம்பரமா விழா எடுக்க ஏன் கொடுக்கணும், ஒரு சின்ன கோவில்ல 60 ஆம் கல்யாணம் பண்ணா போதுமே என்று மீனா பொறுப்பாக பேசுகிறார். முன்கோப முத்து இந்த பொன்னான அட்வைஸை கேட்க மறுத்து வாக்குவாதம் செய்கிறார். மீனா பொறுமையாக புரிய வைக்க முயற்சி செய்கிறார். நாம சக்திக்கு மீறி விழா கொண்டாட நினைக்குறது ஆடம்பரம் என்று சொல்ல முத்து அதை கேட்காமல் கோவமாக சென்றுவிடுகிறார். 

முத்துவின் நண்பர்கள் மீனாவுக்கு எதிராக பேசி அவரின் மனதை மாற்றுகின்றனர். இத்தனை நாட்களாக மீனாவுக்கு உறுதுணையாக இருந்த முத்து, மீனாவை எதிர்க்க ஆரம்பிக்கிறார். ``எல்லாம் பொண்டாட்டியும் இப்படி தான்” என்று சொல்லி முத்துவின் நண்பர்கள் ஜெனரலைஸ் செய்து மெச்சூரிட்டி இல்லாமல் அட்வைஸ் கொடுக்கின்றனர். இதனை மீனா எப்படி சமாளிக்க போகிறார் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும். 

மறுபுறம் மனோஜ் பாதுகாப்புக்காக பவுன்சர் ஒருவரை பணிக்கு அமர்த்த, அந்த காட்சிகள் கலகலப்பாக நகர்கிறது. நேற்றைய எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில் ரோகிணி மனோஜிடம் 1 லட்சம் பணம் கேட்க, மனோஜ் அவரை துருவி துருவி கேள்வி கேட்கிறார். என் கிட்ட 1 லட்சம் இல்ல, அப்படி என்ன அவசர தேவை, யார் அந்த தோழி என்றெல்லாம் ரோகிணியை கேள்வி கேட்கிறார். மனோஜ் தவறு செய்துவிட்டு பண பிரச்னையில் சிக்கும் போதெல்லாம் கேள்வி கேட்காமல் ரோகிணி பணம் கொடுத்தார். ஆனால் மனோஜ் ஆயிரம் கேள்வி கேட்கிறார். ரோகிணியின் ரியாக்‌ஷன் என்னவென்பது இன்று தெரிந்து விடும். 

நேற்றைய எபிசோடில் (12/09/2024) கோபி வாக்கிங் செல்கிறார். எழி, செழியனும் அங்கு வாக்கிங் செல்கின்றனர். அங்கு வரும் அனைவரும் கோபியிடம் துக்கம் விசாரிக்கின்றனர். உன் அப்பாவுக்கு சடங்கு செய்ய உன்னையே அனுமதிக்கவில்லையா? என்று கோபியை காயப்படுத்துகின்றனர். கோபி செழியனிடம் பாக்யா தான் இதற்கெல்லாம்  காரணம் என சொல்லி திட்டுகிறார். 

எழில் தாத்தாவின் பிறந்தநாளின் போது எடுத்த வீடியோவை வீட்டினர் முன்பு போட்டு காட்டுகிறார். தாத்தாவுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை பார்த்து அனைவரும் அழுகின்றனர். தாத்தா இறந்தது போல் கேரக்டர் போன வாரமே முடிந்தாலும், மீண்டும் மீண்டும் காட்டப்படுவது ரசிகர்களை கொஞ்சம் விமர்சிக்க வைத்துள்ளனர். எதற்காக அழும் காட்சிகளையே காட்ட வேண்டுமென கேள்வி எழுப்புகின்றனர். மேலும் நேற்று வெளியான ப்ரோமோவில், தாத்தா அனைவருக்கும் இறப்பதற்கு முன் கடிதம் எழுதி வைத்தது போல காட்சிகள் வருகிறது. நான் இறந்துவிடுவேன் என்று எனக்கு தெரியும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்றைய எபிசோடில் கார்த்திக் கீதா பற்றிய அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்கிறார். மற்றொருபுறம் ஐஸ்வர்யா சரவணனை தனியாக சந்தித்து பேசி, வீட்டில் தீபாவின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகப்படுகிறார். 

சரவணன் கீதாவின் உண்மை முகம் என்ன என்பதை கார்த்திக்கிடம் சொல்கிறார். உன் வீட்டுக்கு வந்திருக்க கீதா ஒரு கொலையை பண்ணிட்டு வந்திருக்காங்க என்கிறார். கார்த்தி நேரடியாக கீதாவிடம் கேட்டு விடுகிறார். நீங்க ஏன் கொலை பண்ணீங்க, உங்க பக்கம் இருக்க நியாயம் என்ன? என்று கேட்கிறார். 

தீபா உண்மைகளை சொல்கிறார். எம்.எல்.ஏவின் மகன் கீதாவின் தங்கையை காதல் என்ற பெயரில் ஏமாற்றுகிறார். இதனால் கீதாவின் தங்கை கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார். ஒரு கட்டத்தில் பிரச்னை அதிகமாகி கீதா அந்த எம்.எல்.ஏ மகனை கொலை செய்கிறார். கீதா இந்த ப்ளாஷ்பேக்கை சொல்லி முடிக்கையில் இது கொலை அல்ல `வதம்’ என்கிறார். இந்த கதையை வைத்து பார்க்கும் போது பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் எம்.எல்.ஏ மகனை கீதா கொலை செய்துவிட்டு தப்பி இருக்கிறார். இனி கார்த்திக் இந்த பிரச்னையையும் சேர்த்து சமாளிக்க வேண்டும். 

கார்த்திக்கின் அம்மா கீதா - கார்த்திக்கு ரகசியமாக கல்யாண ஏற்பாடு செய்கிறார். அதனையும் சமாளிக்க வேண்டும். அடுத்த எபிசோடுகளில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.

நிவின் - யமுனா திருமணம் நடக்கவில்லை. காவேரியின் முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. யமுனாவுக்கு விஜய் வாக்கு கொடுத்திருக்கிறார். நிவினை சந்தித்து பேசி யமுனாவின் காதலை பற்றி சொல்லி புரிய வைக்க நினைக்கிறார். ஆனால் அவர் காவேரி - விஜய்யின் காண்டிராக்ட் திருமணம் பற்றி பேசுகிறார். இன்று வெளியான ப்ரோமோவில், விஜய் நிவினிடம் காவேரியை காதலிப்பதை சொல்லிவிடுகிறார். நாங்கள் இருவரும் கணவன் -மனைவியாக வாழ்கிறோம் என்றும் சொல்லி விடுகிறார்.

நிவின் அதிர்ச்சியுடன் பார்க்கிறார். இந்த ப்ரோமோ செம வைரல். குறிப்பாக விஜய் - காவேரி ஃபேன் பேஜ்களில் இந்த காட்சிக்காக காத்திருந்தோம் என்று மீம் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் நிவின் மீது நெகடிவ் ஷேட் விழுவது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அவரின் கதாபாத்திரம் ஆரம்பம் முதலே ஒரு ஹீரோவை போன்று சித்தரிக்கப்பட்டார். சரி இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்! 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.