கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா… காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்…!

குடும்பத்துடன் காரில் வந்து கொண்டிருந்த நடிகர் ஜீவாவுக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று சேலத்தில் இருந்து சென்னைக்கு குடும்பத்துடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையம் அருகே நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது.

இரு சக்கர வாகனம் குறுக்கே வந்த காரணத்தால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் ஜீவா உட்பட அவரின் குடும்பத்தினர் பலருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

மேலும் காரின் முன் பகுதி பயங்கரமாக சேதம் அடைந்தது. சாலை விபத்தில் சிக்கியது தொடர்பாக நடிகர் ஜீவா சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளா.ர் விபத்திற்கு காரணமான இரு சக்கர வாகன ஓட்டி மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்திருக்கின்றார்.

The post கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா… காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்…! first appeared on Tamilnadu Flash News.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.