கைதி விவகாரம்: வேலூர் சிறையில் டி.ஜி.பி திடீர் ஆய்வு - கூடுதல் எஸ்.பி அதிரடி மாற்றம்!
வேலூர் மத்திய சிறையில் இருந்த `ஆயுள்’ தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தியது, தனிமைச் சிறையில் 95 நாள்கள் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்தியது போன்ற புகார்கள் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.
சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட கைதி சிவக்குமாரிடம் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வேலூர் மத்திய சிறையில் நேற்று காலை முதல் மாலை வரையிலும் சிறை மருத்துவர், சக கைதிகள் உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை நடத்திவிட்டு வெளியேறினர்.
அப்போது, சில பதிவேடுகளையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய வேலூர் சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமானை, சென்னை புழல் சிறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர் தயாள். மேலும், புழல் சிறைக் கண்காணிப்பாளராக இருந்த பரசுராமன் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதே நேரம், சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர் தயாள், வேலூர் மத்தியச் சிறையிலும் இன்றைய தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


