Nilgiri: மருத்துவ குணம் நிறைந்த ஜாதிக்காய் ஊறுகாய்; உற்பத்தியில் அசத்தும் நீலகிரி தோட்டக்கலைத்துறை!

தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த பழப்பண்ணைகளாக நீலகிரி மாவட்டத்தின் பர்லியார் மற்றும் குன்னூர் பழப்பண்ணைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. குன்னூரில் அரசு பழவியல் நிலையமும் இயங்கி வருகிறது.

ஜாதிக்காய் ஊறுகாய்

பழப்பண்ணைகளில் அறுவடை செய்யப்படும் பழங்களைப் பழவியல் நிலையத்தில் பதப்படுத்தி ஜாம், ஜூஸ்‌, ஜெல்லி, ஊறுகாய் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்றி தோட்டக்கலைத்துறை மூலம் நேரடியாக விற்பனையும் செய்து வருகின்றனர். மருத்துவ குணம் நிறைந்த நறுமண பொருள்களில் ஒன்றான ஜாதிக்காயில் ஊறுகாய் தயாரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாதிக்காய் ஊறுகாய் தயாரிப்பு குறித்துத் தெரிவித்த நீலகிரி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், "செரிமானப் பிரச்னை, வயிற்றுப்போக்கு, மூளை புத்துணர்வு போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட காயாக ஜாதிக்காய் இருக்கிறது. பர்லியார் பழப் பண்ணையில் அறுவடை செய்யப்படும் ஜாதிக்காயிலிருந்து பல மதிப்புக் கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்கிறோம்.

ஜாதிக்காய் ஊறுகாய்

ஜாதிக்காய் சதைப்பகுதியிலிருந்து ஊறுகாய் தயாரிக்கிறோம். அரை கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் 150 ரூபாய்க்கும், 300 கிராம் ஊறுகாய் 130 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். இந்த முறை 2.50 டன் ஜாதிக்காய் ஊறுகாய் தயாரிக்கிறோம். தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விற்பனை நிலையங்களில் கிடைக்கும்" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.