Jeeva: கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா - லேசான காயம் எனத் தகவல்

நடிகர் ஜீவா பயணித்த கார் விபத்துகுள்ளாகி இருக்கிறது.

நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு மீது மோதி, இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. லேசான காயங்களுடன் ஜீவாவும் அவரது குடும்பத்தினரும் உயிர் தப்பி இருக்கின்றனர். காருக்குள் இருந்தது ஜீவா எனத் தெரிந்ததும் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து மாற்று காரில் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு ஜீவா அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

ஜீவா

ஜீவா கடைசியாகத் தமிழில் வரலாறு முக்கியம் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில் யாத்ரா 2 படத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பிளாக் என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.