ரன்வீர் சிங் - தீபிகா படுகோனுக்குப் பெண் குழந்தை! மகளுடன் புதிய வீட்டில் குடியேறும் தம்பதி..!
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதி, தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தனர். தீபிகா படுகோன் கர்ப்பத்துடன் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். அதோடு தனது குழந்தைக்காக ஏராளமான பரிசுப்பொருள்களை வாங்கி வைத்திருப்பதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
தீபிகா படுகோன் பிரசவத்திற்காக தென் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு மும்பையில் உள்ள பிரபலமான சித்திவிநாயக் கோயிலுக்கு தனது கணவருடன் சென்று வழிபட்டார்.
தீபிகாபடுகோனேயின் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனையில் நேற்று தீபிகா படுகோனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தென்மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் இக்குழந்தை பிறந்துள்ளதாக தீபிகா படுகோனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
6 ஆண்டுகள் காதலித்து வந்த தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தையாகும்.
குழந்தை பிறந்ததை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டா பதிவில் உறுதிபடுத்தியுள்ளார். தாயாகி இருக்கும் தீபிகா படுகோனுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் தீபிகா படுகோன் தம்பதிக்கு வாழ்த்துக்கூறி வருகின்றனர். சிலர் கணபதி விழாவின் போது தீபிகாவின் இல்லத்திற்கு லட்சுமி வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தீபிகா படுகோன் தனது மகளுடன் புதிதாக வாங்கி இருக்கும் வீட்டில் குடியேற இருக்கிறார். அந்த வீடு மும்பையில் நடிகர் ஷாருக்கான் வீடு அருகில் கடற்கரையையொட்டி இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.100 கோடியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


