Salt: `கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு - உப்பின் பலன்கள்! | Health Tips

உப்பு பற்றி நாம் அறியாத தகவல்களையும், அதன் பலன்களையும் பற்றி சொல்கிறார் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு...

1. உணவில் உப்பு சேர்த்துச் சாப்பிடும் ஒரே மிருகம் மனிதன் மட்டுமே...

2. உலகின் முதல் வணிகப்பொருள் உப்புதான்.

3. உலகின் முதல் வேதியியல் பொருள் ஊறுகாய்.

4. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் காற்றிலேயே அயோடின் சத்து இருக்கிறது.

உப்பு

5. கல் உப்பில் இயற்கையாகவே அயோடின் இருக்கிறது. அது நம் உடலுக்கு போதும்.

6. கல் உப்பைத் துணியில் முடிந்து சூடான வெந்நீரில் தொட்டு, உடலின் வலியுள்ள பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.

7. கறுக்கிய உமித்துள், தூளாக்கிய கல் உப்பு இரண்டையும் சம அளவு சேர்த்து பல்பொடியாகப் பயன்படுத்தி வந்தால், ஈறு வீக்கம், பல் கூச்சம், பல் ஆடுதல் போன்றவை சரியாகும்.

8. பாதத்தில் ஆணி அல்லது முள் குத்திவிட்டால், அந்த இடத்தில் துணியில் சுற்றிய கல் உப்பை சூடான நல்லெண்ணெயில் வைத்து எடுத்து ஒத்தடம் கொடுக்கலாம். காயத்தில் சீழ் பிடிக்காது; புரையோடாது. இதை சுட்டிகை என்போம். 40 வருடங்களுக்கு முன்னால் இதுதான் டி.டி. இன்ஜெக்‌ஷன்.

மருத்துவர் மைக்கேல் ஜெயராசு

9. அரை கிராம் கல் உப்பு உண்டால் பசி உண்டாக்கும்; 20 கிராம் கல் உப்பைக் கரைத்துக் குடித்தால் பேதியாகும்; 40 கிராம் கல் உப்பைக் கரைத்துக் கொடுத்தால் வயிற்றிலிருப்பது அத்தனையும் வாந்தியாக வெளியேறும். விஷமருந்தியவர்களுக்கான முதலுதவி இது.

10. உப்பு, தென்னிந்தியர்களுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருள். வட இந்தியாவிலோ, ராஜஸ்தான் மற்றும் சிந்துப்பகுதியில் இருந்த பாறைகளிலிருக்கிற தாது உப்புகளை உப்பாகப் பயன்படுத்தி வந்தார்கள். அந்த உப்பில் அயோடின் இல்லை. அவர்களுக்கு அயோடின் சத்து வேண்டுமென்பதற்காக, இந்தியா முழுக்க அயோடின் சேர்க்கப்பட்ட உப்பை விற்பனை செய்ய முடிவெடுத்தது அரசு. விளைவு, தென்னிந்தியாவில் தைராய்டு பிரச்னை அதிகரிக்க ஆரம்பித்தது.

11. தூள் உப்பை சில்வர் தட்டில் கொட்டி சுள்ளென்ற வெயிலில் 20 நிமிடம் வைத்து எடுத்தால், கூடுதலாகச் சேர்க்கப்பட்ட அயோடின் ஆவியாகி விடும். இதை உணவில் சேர்த்து வந்தால், தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.

12. இந்துப்பை தினசரி சமையலில் சேர்க்கச் சொல்லி சித்த மருத்துவ நூல்கள் அறிவுறுத்தவில்லை. அதை, மருத்துவத்தில் சில சூரணங்களில் பயன்படுத்துகிறோம். இந்துப்பில் இருக்கிற பொட்டாசியம் சிறுநீரகம் மற்றும் இதய நோயாளிகளுக்குக் கெடுதலை ஏற்படுத்தும். வியாபாரிகளில் பேச்சை நம்பி இந்துப்பைப் பயன்படுத்தாதீர்கள். மருத்துவ ஆலோசனை மிக மிக அவசியம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.