மத்திய வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம்… வானிலை எச்சரிக்கை…!
மத்திய வங்கக்கடலில் அடுத்து 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
வட மேற்கு மற்றும் மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கின்றது.
ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், 260 கிலோ மீட்டர் கிழக்கே கோபால்பூர் பாரதீப் தென்கிழக்கு 290 கிலோமீட்டர் மற்றும் திகாவிலிருந்து 410 கிலோமீட்டர் தெற்கே காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கின்றது. இது வட மேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
அதன் பிறகு வடக்கு ஒடிசா கங்கை மேற்கு வங்காளம் வழியாக மேற்கு வட மேற்கு நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இதனால் தமிழகத்திற்கு பெரிய அளவு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
The post மத்திய வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம்… வானிலை எச்சரிக்கை…! first appeared on Tamilnadu Flash News.மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.