இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி… சுகாதார அமைச்சகம் தகவல்…!
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது.
குரங்கம்மை என்று அழைக்கப்படும் எம்பாக்ஸ் வேகமாக பரவி வருகின்றது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்து இருக்கின்றது.
இதற்கிடையே தமிழகத்திலும் சுகாதாரத்துறை அமைச்சகம் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது. தமிழகத்தில் விமான நிலையங்களில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை உத்தரவிட்டிருக்கின்றது. இதை தொடர்ந்து தற்போது வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக கூறப்படுகின்றது. குரங்கம்மை நோய் அறிகுறி உடன் வந்த பயணி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கின்றது.
The post இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி… சுகாதார அமைச்சகம் தகவல்…! first appeared on Tamilnadu Flash News.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


