Rohini: `பாலியல் புகாருக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை - நடிகை ரோகிணி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் விசாகா கமிட்டி அமைத்து சில பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளதாகவும், ஏதேனும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம், நிச்சயம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும் என்றும் நடிகர் நாசர் தெரிவித்திருந்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்பில் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் சங்கம் அமைத்த விசாகா குழுவின் தலைவரான நடிகை ரோகிணி பேசியபோது, " நடிகர் சங்கத்தின் சார்பில் 2019-லேயே விசாகா கமிட்டியை உருவாக்கி விட்டோம். அதன் பிறகு சில புகார்கள் வந்தது. அதை நாங்கள் தீர்த்தும் வைத்திருக்கிறோம். தற்போது சில விஷயங்கள்( ஹேமா கமிட்டி) பூதாகரமாகி இருக்கும் நிலையில், நாங்கள் இன்னும் விசாரனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிறோம். இந்த கமிட்டியில் நடிகர், நடிகைகள் மட்டுமன்றி யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம்.
வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓ-வை சார்ந்த சிலர் இந்த கமிட்டியில் இருக்கின்றனர். புகார் கொடுப்பதற்கு நம்பரையும், இமெயில் ஐடி ஒன்றையும் உருவாக்கி இருக்கிறோம். எந்த ஒரு தயக்கமும் இன்றி நீங்கள் எங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இனிமேல் எந்த ஒரு அத்துமீறலையும் யாரும் சகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்துமீறல்களில் ஈடுபட்டு தவறு செய்து புகாருக்கு உள்ளானவர்கள், நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.
5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க அவர்களுக்கு தடை விதிக்கப்படும். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு கோரிக்கை வைக்க உள்ளோம். நடிகர் சங்கம் எப்போதும் ஆதரவாக இருக்கும் என்பதை அனைத்து பெண்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம். அதனால் யாரும் பயப்பட வேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.