பால் கொழுக்கட்ட கணக்கா இருக்குறியே தமன்னா!.. போட்டோஸ் பார்த்து உருகும் ரசிகர்கள்!…
Tamannah: ஹிந்தியிலுருந்து தமிழே தெரியாமல் கோலிவுட்டுக்கு வந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்த நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். ரசிகர்களை தன் பக்கம் இழுக்க மில்க் பியூட்டி இவருக்கு உதவியாக இருந்தது. கல்லூரி என்கிற படத்தில் அறிமுகமான தமன்னா அதன்பின் படிப்படியாக வளர்ந்தார்.
ஒருபக்கம் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்த தமன்னா ஒரு கடத்தில் இரண்டு மொழிகளிலும் பயணம் செய்தார். கோலிவுட்டில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
விஜயுடன் சுறா படத்திலும், அஜித்துடன் வீரம் படத்திலும் நடித்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் இவரை பேன் இண்டியா நடிகையாக மாற்றியது. எனவே, ஹிந்தியிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தது., சில வெப் சீரியஸ்களிலும் நடித்தார். அதிலும், படுக்கையறை காட்சிகளில் நடித்து கிளுகிளுப்பு காட்டினார்.
அந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாக மாறியது. ஒரு ஹிந்தி நடிகருடன் இவருக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், தமன்னா அதை மறுத்தார். ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய குத்தாட்ட பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
மில்க் பியூட்டியை வேற லெவலில் காண்பித்து அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், தமன்னாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரின் ரசிகர்களுக்கு வார இறுதி விருந்தாக அமைந்திருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.