``அன்பு தமிழக முதல்வா... பள்ளிக்கூடம் கட்டித்தாங்க.. மழைக்காலம் வருதே வைரலாகும் அரசுப்பள்ளி பாடல்!

அண்மையில் கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான சர்ச்சைக்கு இடையே அரசுப்பள்ளிகளில் ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். போதிய கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் புதுபிக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

அரசுப் பள்ளி

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க.. என பாடல் பாடி முதல்வருக்கு கோரிக்கை வைத்த பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மைய நாயக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டித்தர வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து மனமுருகி பாடினர். அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம்

இந்நிலையில் பள்ளியின் நான்கு வகுப்பறைகள் பழுதடைந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வகுப்பறை கட்டிடங்கள் புதிதாக கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. தற்போது வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டு ஓராண்டு வரப்போகும் நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டித்தரப்படவில்லை. இடப்பற்றாக்குறையால் பள்ளி மாணவர்கள் மரத்தடியில் படித்து வரும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் மீண்டும் மழை காலம் தொடங்க உள்ள நிலையில் தங்களுக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பக்தி பாடல் பாணியில் அன்பு தமிழக முதல்வா... பள்ளிக்கூடம் கட்டித்தாங்க.. மழைக்காலம் வர இருக்கின்றதே..

பாடும் மாணவர்கள்

என்று தொடங்கும் பாடல் மூலம் தங்களுக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தியும் தமிழக முதல்வருக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் உருக்கமாக பாடிய பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.