ரூ. 9.2 கோடி மதிப்புடைய கல்லை, வாசல் படியாக பயன்படுத்திய மூதாட்டி!
தென்கிழக்கு ரோமானியாவில் வாழ்ந்துவந்த மூதாட்டி பல பத்தாண்டுகளாக தன்வீட்டில் மறைந்திருந்த அதிர்ஷ்டத்தை அறியாமல் வாழ்ந்துவந்துள்ளார்.
கோல்டி என்ற கிராமத்தில் வசிந்த அந்த மூதாட்டி, அவரது வீட்டின் அருகில் இருந்த ஓடையில் இருந்து பளபளப்பான கல் ஒன்றை எடுத்துவந்துள்ளார். அதன் மதிப்பை அறியாமல் நீண்டநாள்களாக அதனை வாசல் படியாக பயன்படுத்தி வந்துள்ளார்.
அந்த கல், இதுவரை உலகில் கிடைத்த பெரிய ஆம்பர் நக்கட்களில் ஒன்று. அதன் எடை 3.5 கிலோ கிராம். மதிப்பு சுமார் 1.1 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 9.2 கோடி ரூபாய் ஆகும்.
உலகில் 160-க்கும் மேற்பட்ட ஷேட்களில் ஆம்பர் நக்கட்கள் கிடைக்கின்றன. இது கருப்பு ஆம்பர் நக்கட் எனக் அழைக்கப்படுகிறது.
மூதாட்டி அந்த விலைமதிப்பில்லா கல்லைப் பற்றி அறியாமல் இருந்ததுள்ளார். அத்துடன், மூதாட்டி வீட்டுக்கு வந்து சென்ற கொள்ளையர்களும் கூட அதனை கவனிக்காமல் விட்டுச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்களின் கண்களிலும் மூதாட்டியின் கருத்திலும் சிக்காத அந்தக் கல்லின் மதிப்பை உறவினர் ஒருவர் கண்டறிந்தார். அவர் சந்தேகித்து அதனை ஆய்வுக்கு அனுப்பியதில் அது மதிப்புமிக்க அம்பர் கல் என்பது தெரியவந்தது.
ரோமானி அதிகாரிகள் அந்த கல்லை வாங்கி, தேசிய செல்வமாக (National Tresure) அறிவித்தனர்.
இந்த அம்பர் கல், 38.5 முதல் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையானது எனக் கண்டறிந்துள்ளனர். இப்போது அந்த அம்பர் புசாவ் மாகாண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. புசாவ் மாகாணம் அம்பர் கற்களுக்கு புகழ்பெற்றது. இந்தப் பெரிய கல் அதன் செழுமையை நிலைநாட்டியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


