`சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு - உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னால்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அறநிலையத் துறை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், "சிதம்பரம் நடராஜர் கோயில் 2008 முதல் 2014 வரை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முன்னதாக அறநிலையத் துறையிடம் இருந்தபோது ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது. ஆனால் தற்போது ரூ.2 லட்சம் மட்டுமே வருமானம் வருகிறது என்கிறார்கள். எனவே, கோயிலின் வருவாய் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராமநாதபுரம் நீதிமன்றம்.

இந்த வழக்கு கடந்த 5-ம் தேதி நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், "கோயில் நிர்வாகம் பொது தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோயில் கணக்கில் செலுத்தப்படுவதில்லை. அதனை தீட்சிதர்களே எடுத்துக் கொள்கின்றனர். இதனால்தான் கோயில் வருமானம் பெருமளவு குறைந்துவிட்டது. எனவே, தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு கோவில் சென்ற பிறகு எவ்வளவு வருமானம் வந்தது. அது எங்கே போனது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

இதற்கு பொது தீட்சிதர்கள் தரப்பில், "அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோயில் இருந்த காலக்கட்டத்தில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பூஜைகள், அர்ச்சனை, தரிசனத்துக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனவேதான் அதிக வருவாய் கிடைத்தது. ஆனால் பொது தீட்சிதர்கள் வசம் கோயில் வந்த பிறகு உண்டியல் அகற்றப்பட்டு விட்டது. மேலும் பூஜை, அர்ச்சனை, தரிசனத்துக்கென எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதேநேரத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துக் கொள்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேகர்பாபு தீட்சிதர்கள்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். புராதன சின்னமான சிதம்பரம் நடராஜர் கோயிலை முறையாகப் பராமரிக்க வேண்டும். அதற்கு பெருந்தொகை தேவைப்படும் சூழலில், கோயிலைப் பராமரிக்கவும், பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும் பொது தீட்சிதர்களிடம் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது? கோயில் காணிக்கையைத் தவிர்த்து, தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளனவா?.

கோயிலில் உண்டியல் எப்போது அகற்றப்பட்டது?. பூஜைகள், அர்ச்சனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லையா?. ஒவ்வோர் ஆண்டும் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறதா?. இந்த கோயில் பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு அதாவது 2014 முதல் தற்போது வரையிலான கடந்த 10 ஆண்டுகால வரவு - செலவு கணக்குகளை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.