Ravindra Jadeja: ஜடேஜாவின் அரசியல் பிரவேசம்; பா.ஜ.கவில் இணைந்த ரவீந்திர ஜடேஜா
கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார்.
இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய ஆல்ரவுண்டர் ஜடேஜா. 2008-09-ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் 42 விக்கெட்டுகளையும், 739 ரன்களையும் குவித்த ஜடேஜா, பி.சி.சி.ஐ தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு 2009-ஆம் ஆண்டு ஒருநாள், டி20 தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார்.
2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என இந்திய அணி கைப்பற்றுவதில் ஜடேஜாவின் பந்துவீச்சு முக்கிய பங்களித்தது. 2013-ஆம் ஆண்டில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது அதில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஜடேஜா ஜொலித்தார். 2013-ஆம் ஆண்டு ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடம் பிடித்துச் சாதித்தார்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மட்டுமின்றி ஐ.பி.எல்-லும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பைத் தொடருடன் டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஜடேஜா பா.ஜ.கவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார்.
#SadasyataAbhiyaan2024 pic.twitter.com/he0QhsimNK
— Rivaba Ravindrasinh Jadeja (@Rivaba4BJP) September 2, 2024
ஏற்கனவே அவரது மனைவி ரிவாபா பா.ஜ.கா-வில் இணைந்து குஜராத்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். மனைவியுடன் கட்சி தொடர்பான சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த இவர் தற்போது அதிகாரப்பூர்வமாகவே பா.ஜ.கவில் இணைந்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


