Tinder leave: டேட்டிங் செல்ல ஊதியத்துடன் லீவ் தரும் நிறுவனம்! - எங்கு தெரியுமா?

தாய்லாந்தில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று, தங்கள் ஊழியர்கள் டேட்டிங் செல்ல ஊதியத்துடன் லீவ் கொடுக்கிறது. டிண்டர் லீவ் (Tinder leave) எனும் இந்த முறையை வைட்லைன் குரூப் (Whiteline Group) என்ற தாய்லாந்து மார்க்கெட்டிங் நிறுவனம் கொண்டுவந்திருக்கிறது.

டேட்டிங்

அதுவும், இந்த நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவர் டேட்டிங் செல்ல நேரமில்லாத அளவுக்கு வேலையில் மிகவும் பிஸியாக இருப்பதாக நிறுவனத்தில் நேரடியாகவே புகார் செய்ததால் இத்தகைய முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து இந்நிறுவனம் LinkedIn-ல், `எங்கள் ஊழியர்கள் டேட்டிங் செய்ய டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், ஊழியர்கள் காதலில் இருப்பது அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்றும், அது நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்றும் இந்த நிறுவனம் நம்புகிறது. நிறுவனத்தின் கூற்றின்படி, Tinder leave மூலம் டேட்டிங் செல்லும் ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாக நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது. அதேசமயம், இந்த Tinder leave-க்கு எத்தனை நாள்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை வெளியிடவில்லை.

Dating| டேட்டிங்

இன்னொருபக்கம், தங்கள் ஊழியர்களுக்கு டிண்டர் பிளாட்டினம் (Tinder Platinum), டிண்டர் கோல்ட் (Tinder Gold) ஆகியவற்றின் ஆறு மாத சந்தாவை நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. ஆனால், இவையெல்லாம் இந்த ஆண்டு ஜூலை 9 முதல் டிசம்பர் 31 தேதிகளுக்குள் வேலையில் சேரும் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தாய்லாந்து மார்க்கெட்டிங் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் பதிவுசெய்யுங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.