உடல்பருமன் டு பாடிபில்டிங்… பிரேசிலின் 19 வயதான பிரபலம் மாரடைப்பால் உயிரிழப்பு…!
19 வயதான பாடி பில்டர் மத்தேயூஸ் பாவ்லக் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
பிரேசில் நாட்டை சேர்ந்த வளர்ந்து வரும் பாடி பில்டிங் நட்சத்திரமாக இருந்து வருபவர் மத்தேயூஸ் பாவ்லக். 19 வயதான இவர் தனது உடற்பயிற்சியின் மூலம் பாடி பில்டருகான உடல்வாகுவை கொண்டிருப்பதை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தனர். 5 வருடங்களுக்கு முன்பு மிகுந்த உடல் பருமன் கொண்டவர்கள் உடல் எடையை குறைக்கும் போட்டியில் பங்கெடுத்த மத்தேயூஸ் பாவ்லக் அதிலிருந்து பாடி பில்டிங் ஆர்வத்தை பெற்றார்.
பிரேசில் நடந்த பல்வேறு பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்று பேரும் புகழையும் சம்பாதித்து வைத்திருந்த இவர் பிரேசிலின் சாந்தா கத்ரீனா மாகாணத்தில் தனது வீட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
உடலை அசாதாரணமாக மாற்ற பாடி பில்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஸ்டெராய்டுகளின் பாதுகாப்பு தன்மை மீதான சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது. இவ்வளவு இளம் வயதில் அசாதாரண உடல் வகை பெற இது போன்ற ஸ்டெராய்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post உடல்பருமன் டு பாடிபில்டிங்… பிரேசிலின் 19 வயதான பிரபலம் மாரடைப்பால் உயிரிழப்பு…! first appeared on Tamilnadu Flash News.மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


