`WAIT... புல்லட் வாங்கப் போறீங்களா?ரூ.2 லட்சம் விலையுள்ள இந்த ஜாவா பைக்கையும் பார்த்துடுங்க
புல்லட்டுக்குப் போட்டியெல்லாம் இருக்க முடியாது என்றாலும் - ஹோண்டா, யெஸ்டி, ஹீரோ, பிஎஸ்ஏ என்று ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
Jawa 42 FJ:
இதில் ஜாவாவும் முக்கியமான ஒரு பைக். ஜாவா பைக்குகளை வெளியிடுவது க்ளாஸிக் லெஜெண்ட்ஸ் என்கிற நிறுவனம்.
போன மாதம் ஜாவாவின் 42 என்கிற பைக்கில் ஒரு அப்டேட்டைக் கொண்டு வந்தார்கள். இப்போது ஜாவா 42 FJ என்கிற ஒரு புல்லட் மாடல் ரோட்ஸ்ட்டர் பைக்கைக் கொண்டு வந்திருக்கிறது க்ளாஸிக் லெஜெண்ட்ஸ். ஜாவா 42 பைக்கைவிட இதன் எக்ஸ் ஷோரூம் விலை 26,000 ரூபாய் அதிகமாக இருக்கிறது.
உங்களுக்கு Jawa 350 பைக் தெரியும்தானே! அதில் இருக்கும் பெரிய 334 சிசி இன்ஜின்தான் இந்த 42 FJ -விலும் இருக்கிறது. 29.1bhp பவர் மற்றும் 29.6Nm டார்க். இது ஜாவா 350-யை விட டெக்னிக்கல் சமாச்சாரங்களில் அதிகம். இதுவே ஜாவா 42-வை விட 2bhp பவரும், 3Nm டார்க்கும் அதிகம். மேலும், ரெகுலர் ஜாவா 42-வைவிட 2 கிலோ அதிகமாக, 184 கிலோ இருக்கிறது இதன் எடை. இதன் சீட் உயரம் 790 மிமீ. கிரவுண்ட் கிளியரன்ஸ் 178 மிமீ. இதன் வீல்பேஸ் 1,440 மிமீ என்பதால், சட் சட் என கட் அடித்து ஓட்ட வசதியாகவே இருக்கும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸும், ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் வசதியும் கொடுத்திருப்பதால், கியர் முட்டல் ஏற்பட்டு இன்ஜின் ஆஃப் ஆகும் என்கிற பயம் தேவையில்லை.
பஞ்சர் பயம் இருக்குமோ?:
யெஸ்டியில் ரோட்ஸ்ட்டர் என்றொரு பைக் இருக்கிறதல்லவா? அதை அப்படியே Silhouette-ல் வரைந்ததுபோலவே இருக்கிறது இந்த 42 FJ. புதிய எல்இடி ஹெட்லாம்ப்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஸ்போக் வீல்களுடன் ஒரு பைக் லாஞ்ச் ஆனது. அப்படியென்றால், பஞ்சர் பயம் இருக்குமோ? ஆனால், கூடவே அலாய் வீல் செட்அப் கொண்ட பைக்கும் வந்தபிறகுதான் நிம்மதியாக இருந்தது. அதனால் ட்யூப்லெஸ் டயர்கள் உண்டு.

இது 42 பாபர் பைக்கில் இருக்கக் கூடிய அலாய் வீல். இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவதால், வீல் ஸ்கிட் ஆகும் என்று கவலைப்படத் தேவையில்லை. அதேபோல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் -ஆப்ஷனலாகக் கூட வாங்க முடியாது.
2 லட்சம், 2.10 லட்சம், 2.15 லட்சம், 2.20 லட்சம் என 5 கலர்களில் வந்திருக்கிறது ஜாவா 42 FJ. இதில் 2.15 லட்சத்துக்குக் கிடைக்கும் காஸ்மோ புளூ மேட் கலரும், மிஸ்டிக் காப்பர் என்கிற கலருக்கும்தான் மவுசு அதிகமாக இருப்பது போல் தெரிகிறது.

ராயல் என்ஃபீல்டு புல்லட், ஹோண்டா சிபி ஹைனெஸ், ஹீரோ மாவ்ரிக் பைக்ஸ் வாங்கப் போகிறவங்க… ஒரு எட்டு ஜாவா 42 FJ பைக்கையும் பார்த்துடுங்க!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


